ராஜிவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலை குறித்து நாளை தீர்ப்பு
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத் தொடர்ந்து இந்த மூவர் மற்றும் ஏற்கெனவே ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேர் என மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் இது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்தும் கேட்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசுக்கு பதில் தெரிவிக்காமல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று முடிவடைந்துவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் நாளையுடன் ஓய்வு பெற இருக்கிறார். இந்த வழக்கில் நாளையே தீர்ப்பும் வழங்கப்படும் என்று ஏற்கெனவே தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருந்தது சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
7 தமிழர் விடுதலை தொடர்பான நாளைய தீர்ப்பை தமிழகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications