முதுபெரும் காங். தலைவரான மாஜி லோக்சபா சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் காலமானார்
டெல்லி: முதுபெரும் காங்கிரஸ் தலைவரும் லோக்சபா முன்னாள் சபாநாயகருமான பல்ராம் ஜாக்கர் (வயது 93) டெல்லியில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல்ராம் ஜாக்கர் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பல்ராம் ஜாக்கர் 1970களில் இருந்து 1990கள் வரை தீவிர அரசியலில் இருந்தவர். மிக மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். 1980 முதல் 1989ஆம் ஆண்டு லோக்சபாவின் சபாநாயகராகவும் பணியாற்றியவர்.
1991ஆம் ஆண்டு பிரதமராக இருந்த நரசிம்மராவ் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2004-2009 ஆம் ஆண்டு காலத்தில் மத்திய பிரதேச ஆளுநராகவும் அவர் பதவி வகித்தார்.
டெல்லியில் வசித்து வந்த 93 வயதாகும் பல்ராம் ஜாக்கருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
Balram Jakhar ji was a popular leader who enriched our Parliamentary democracy in his long political journey. Saddened by his demise. RIP.
— Narendra Modi (@narendramodi) February 3, 2016
பல்ராம் ஜாக்கர் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பல்ராம் ஜாக்கர் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications