88 வயதில் 2வது திருமணம் செய்த காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி
லக்னோ: முன்னாள் ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி தனது 88வது வயதில் உஜ்வாலா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முன்னாள் உத்தர பிரதேச முதல்வரும், முன்னாள் ஆந்திர மாநில ஆளுநருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்.டி. திவாரிக்கு 1954ம் ஆண்டு திருமணமானது. ஆனால் அவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் திவாரிக்கும், டாக்டர் உஷ்வாலா ஷர்மா என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் ரோஹித் சேகர் என்ற மகன் உள்ளார். ஆனால் திவாரி அவரை மகனாக ஏற்கவில்லை.

இந்நிலையில் ரோஹித் சேகர் திவாரி தான் தனது தந்தை என்று கூறி 2008ம் ஆண்டு நீதிமன்றத்தை அணுகினார். வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆன பிறகு திவாரியிடம் வலுக்கட்டாயமாக மரபணு சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் திவாரி தான் ரோஹித்தின் தந்தை என்பது உறுதியானது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேட்டி அளித்த திவாரி கூறுகையில், ரோஹித்தின் தாய் உஜ்வாலா ஷர்மாவுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. இது என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு என்றார்.
இவ்வளவு பேசிய திவாரி வழக்கு தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ரோஹித்தை தனது மகனாக ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் ரோஹித்தின் தாய் உஜ்வாலாவை லக்னோவில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
88வது வயதில் திவாரி இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications