மோடி மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்த தாவூத் கும்பல் சதி: ஜனாதிபதிக்கு வி.ஹெச்.பி. கடிதம்!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் அசோக் சிங்கால் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அசோக் சிங்கால் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகள் இலக்கு வைத்து தற்கொலைப்படை மூலம் தாக்குதல் நடத்தி கொலை செய்ததைப் போல பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடியையும் தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இத்தகைய தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக கவலைப்படுகிறோம். இதனால் அவருக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
நாட்டின் உளவுப் பிரிவும் கூட மோடிக்கு இத்தகைய அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்துள்ளது. மோடி மீது துப்பாக்கிச் சூடு ஏதும் நடத்தாமல் தற்கொலைப்படை நடத்தவே தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவு அமைப்பான ஐ.பி.யின் எச்சரிக்கை குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தியன் முஜாஹிதீன், பாகிஸ்தானின் உளவுத்துறை மற்றும் நிழல் உலக தாதா தாவ்வூத் மற்றும் அவர்களது கூட்டாளிகளே மோடியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அண்மையில் தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு நாடு கடத்துவேன் என்று மோடி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
இவ்வாறு விஸ்வ ஹிந்து பரிஷத் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications