சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்தது எப்படி.. இந்திய அரசு வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
அரசே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இரண்டு நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கும் போது,எதிர் நாடு ராணுவத்திற்கு தெரியாமல், அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் நாட்டின் எல்லையிலேயே சென்று தாக்குதல் நடத்துவதற்கு பெயர்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.
பெரும்பாலும் இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் இரவு நேரத்தில்தான் நடத்தப்படும். இல்லையென்றால் அதிகாலையில் நடத்துவார்கள்.

செய்தது
இந்தியா மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலேயே பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி உள்ளது. இந்த நிலையில் மோடி பிரதமராக பதவியேற்ற பின் கடந்த 2016ல் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. செப்டம்பர் 26 தேதி 2016 அதிகாலை இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியது.
|
வீடியோ வெளியானது
ஆனால் இதற்கு எதிர்கட்சிகள் ஆதாரம் கேட்டு இருந்தது. ஆனால் இதுவரை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கான ஆதாரம் எதுவும் வெளியிடபடாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கான ஆதாரம் வெளியாகி உள்ளது. நேற்று அரசு சார்பாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

எப்படி எடுத்தார்கள்
இந்த வீடியோ இந்திய ராணுவம் சார்பாக டிரோன் மூலம் எடுக்கப்பட்டது. இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்த போது, உதாம்பூர் ராணுவ தலையகத்தில் இருந்து, இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் கண்காணிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே அதிகாலையில் எடுக்க கூடிய வகையில் கேமரா பொருத்தப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன நடக்கிறது
அதிகாலையில் எடுக்கப்பட்டதால், இந்த வீடியோ மிகவும் தெளிவாகவில்லை. இதனால் வீடியோவில், துப்பாக்கி சண்டை நடப்பது மட்டும் பதிவாகி உள்ளது. மேலும் பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளே இந்திய ராணுவ வீரர்கள் செல்வதும் இதில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் மீட்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வைரலாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications