நவி மும்பையில் காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. ஊர் மக்கள் எப்படி மீட்டனர் பாருங்கள்- வீடியோ
Recommended Video

மும்பை: நவி மும்பை பகுதியில், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒரு குடும்பத்தை சக மக்கள் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை, தலோஜா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடுமையான மழை, வெள்ளம் காரணமாக, கால்வாயில் கார் ஒன்று சிக்கிக்கொண்டது.

அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண் உட்பட நான்கு பேர், கார் மீது ஏறி உதவி கோருகிறார்கள். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஒருவர் பின் ஒருவராக ஓடி வந்து, கயிறு மூலம், அந்த குடும்பத்தை மீட்கிறார்கள். வெற்றிகரமாக நால்வரையும் ஊர் மக்கள் காப்பாற்றியுள்ளார்கள். இந்த வீடியோவில் அந்த காட்சிகள் தத்ரூபமாக இடம் பெற்றுள்ளன.
#WATCH Locals pull a family to rescue using a rope after the family's car was submerged in water, in Navi Mumbai's Taloja #Maharashtra (16.07.18) pic.twitter.com/bD7ubV7xnN
— ANI (@ANI) July 17, 2018












Click it and Unblock the Notifications