மல்லையா வெளிநாட்டுக்குப் போனது கூட தெரியாமல் தடுக்கக் கோரி வழக்குப் போட்ட 17 வங்கிகள்!
டெல்லி: விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சிக்கிறார். அவரை வெளிநாடு செல்லவிடாமல் தடுக்க வேண்டும் என்று கோரி 17 வங்கிகளின் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கத் தொடுத்தன. ஆனால் "பார்ட்டி" ஏற்கனவே நாட்டை விட்டுப் போய் விட்டார். அது கூட தெரியாத அளவில் வங்கிகள் உஷாராக இருந்துள்ளன.
அவர் மார்ச் 2ம் தேதியே போய் விட்டார். வங்கிகள்தான் மிக மிக தாமதமாக கோர்ட்டுக்கு வந்துள்ளன. கிட்டத்தட்ட ரூ. 10,000கோடி அளவுக்கு வங்கிகளிடம் கடன் வாங்கியுள்ளார் விஜய் மல்லையா. இதை இவரது நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் டபாய்த்து விட்டன.
இதையடுத்து தனது யுபி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்திடம் விற்று விட்டார் மல்லையா. மேலும் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் விலகி விட்டார். இதற்கு மாறாறாக டியாஜியோ நிறுவனம் ரூ. 515 கோடியை மல்லையாவுக்கு அளித்தது.

கோர்ட்டுக்குப் போன வங்கிகள்
இதனால் எந்த நேரத்திலும் மல்லையா லண்டனுக்குக் கிளம்பிப் போய் விடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகள் சார்பில் பெங்களூர் கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் ஒரு மனு போடப்பட்டது. அதை விசாரித்த தீர்ப்பாயம், லண்டன் நிறுவனம் அளித்த ரூ. 515 கோடியை மல்லையா எடுக்கக் கூடாது என்று தடை விதித்தது.

சுப்ரீம் கோர்ட்டில் புது வழக்கு
இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய வழக்கை நேற்று 13 வங்கிகளும் போட்டன. அதில், தங்களுக்குத் தர வேண்டிய கடன் பாக்கியைத் திருப்பித் தராமல், மல்லையாவை வெளிநாட்டுக்குப் போக அனுமதிக்கக் கூடாது என்று கோரியிருந்தன.

அட்டர்னி ஜெனரல்
இந்த வழக்கில் வங்கிகள் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி, மல்லையா லண்டனில் செட்டிலாகத் திட்டமிட்டுள்ளார். அதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கடன் கொடுத்த வங்கிகள்
அப்பாவி மக்களுக்கு கடன் கொடுக்கவும், கடனைத் திரும்பவும் அடாவடியாக செயல்படும் வங்கிகள் இப்போது மலை முழுங்கி மல்லையாவிடம் சிக்கித் தவிக்கின்றன. இவைதான் அந்த "அப்பாவி" வங்கிகள் - ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், பாங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யுகோ பாங்க், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் பாங்க், ஐடிபிஐ.

மார்ச் 2ம் தேதியே எஸ்கேப்!
ஆனால் மார்ச் 2ம் தேதியே மல்லையா நாட்டை விட்டுப் போய் விட்டார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளரிடம் கேட்டால், அவர் எங்கிருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது. அதுகுறித்து என்னிடம் எந்தத் தகவலம் இல்லை என்று கூறியிருந்தார்.

மெயில் மூலமாகத்தான்
மேலும் அவர் கூறுகையில் மல்லையாவுக்கும் எனக்கும் இடையே மெயில் மூலமாகத்தான் தொடர்புகள் உள்ளன என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எங்கு போயிருப்பார்?
மல்லையா லண்டன் போயிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது நாட்டுக்குப் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடைசிப் புகலிடம் லண்டன்தானோ??
ஏற்கனவே பண மோசடியில் ஈடுபட்டு வழக்கில் சிக்கிய லலித் மோடி லண்டனில்தான் போய் தங்கியுள்ளார். இப்போது மல்லையாவும் அங்கு போய் விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கடைசியில்... எல்லோருக்குமே லண்டன்தான் "கடைசிப் புகலிடம்" போல!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications