மல்லையாவுக்கு கெட்ட+ நல்ல செய்தி.. ஏலத்திற்கு வந்த கிங்பிஷர் ஹவுஸ்.. எடுக்க யாரும் வராததால் தப்பியது
மும்பை: விஜய மல்லையாவுக்குச் சொந்தமான மும்பையில உள்ள கிங்பிஷர் இல்லத்திற்கு இன்று ஒரு கெட்ட நேரமும் ஒரு நல்லநேரமும் ஒன்று சேர அமைந்தது. மல்லையா வாங்கிய கடனை வசூலிப்பதற்காக அந்த ஹவுஸை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான 17 வங்கிகள் கொண்ட கூட்டமைப்பு இன்று காலை அதை ஏலத்திற்குக் கொண்டு வந்தது. ஆனால் ஏலம் எடுக்க யாருமே வரவில்லை.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமையகமாக இந்த கிங்பிஷர் ஹவுஸ் செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தைத்தான்போது 17 வங்கிகள் இணைந்து ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

இந்த இல்லத்தின் மதிப்பு ரூ. 150 கோடியாகும். இதை கடந்த 2015ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான 17 வங்கிகளின் கூட்டமைப்பு கையகப்படுத்தியது. மேலும் ரூ. 90 கோடி மதிப்பிலான கோவாவில் உள்ள கிங்பிஷர் வில்லாவையும் வங்கிகள் கையகப்படுத்தின.
கிங்பிஷர் ஹவுஸ் 2401 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆரம்ப ஏலத் தொகையாக ரூ. 150 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ரூ. 15 லட்சம் டெபாசிட்டைச் செலுத்தி விட்டு ஏலம் கேட்கலாம். ஏலம் எடுப்போர், 5 லட்சமாக கூட்டிக் கேட்க வேண்டும்.
நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனி நபர்களும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்று வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இன்று காலை ஆன்லைன் மூலமாக இந்த ஏலம் தொடங்கியது. 15 பேர் இந்த இல்லத்தை ஏலத்தில் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால்யாருமே வரவில்லை என்று பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து ஏலத்தை தற்போது நிறுத்தி விட்டனராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications