என்னைப் பாடச் சொல்லாத... ராஜ்யசபாவை நடுங்க வைத்த விஜிலா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "வெள்ளிங்கிரி"யை ஞாபகம் இருக்கிறதா.. அட விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் வருவாரே.. அவரேதான். தனது "வெண்கல"க் குரலால் பாட்டுப் பாடி ஊரையே நடுங்க வைப்பார் வெள்ளிங்கிரி. அதேபோல ராஜ்யசபாவை நேற்று பாட்டுப் பாடி அரட்டி விட்டார் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த்.

அவர் பாடிய பாட்டு என்னவோ அருமையான பாட்டுதான். பாரதியார் பாட்டு. ஆனால் விஜிலாதான் அதை காமெடியாக்கி கேலிக்கூத்தாக்கி விட்டார்.

அவர் கேட்ட கேள்விக்கும், பாடிய பாட்டுக்கும் மேட்ச்சே ஆகவில்லை. கடைசியில் சொல்ல வந்ததை சொல்லாமலேயே பேச்சை முடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் விஜிலா.

நடந்தது என்ன....?

நடந்தது என்ன....?

நேற்று காலை ராஜ்யசபாவில் பொது முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் பேச எம்.பிக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. விஜிலாவுக்கும் வாய்ப்பு வந்தது. அவருக்கு 3 நிமிட நேர அவகாசம் தரப்பட்டது.

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சிந்து நதியின் மிசை நிலவினிலே

இதையடுத்து பேச எழுந்த விஜிலா, மாநிலங்களுக்கு இடையிலான ஒற்றுமை என்று மெதுவாக ஆரம்பித்து, திடீரென உரத்த குரலில் சிந்து நிதியின் மிசை நிலவி்னிலே என்று பாட ஆரம்பித்தார். என்ன திடீரென பாட்டுச் சத்தம் என்று ராஜ்யசபா எம்.பிக்கள் விஜிலா பக்கம் திரும்பிப் பார்க்க, அவரோ உரத்த குரலில் பாட்டைத் தொடர்ந்தார்.

அப்படிப் போடு சபாசு!

அப்படிப் போடு சபாசு!

விஜிலா பாடியதைக் கேட்டு ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியனே ஆச்சரியமாகி விட்டார். விஜிலா பாடுவதை ஆதரித்து வெரிகுட் என்று சொல்லியிபடி தலையையும் ஆட்டி பாட்டை ரசித்துக் கேட்க ஆரம்பித்தார்.

முழுஸ்ஸாவா....!

முழுஸ்ஸாவா....!

குரியனே தலையாட்ட ஆரம்பித்து விட்டதைப் பார்த்த விஜிலா, பாட்டைத் தொடர ஆரம்பித்தார். முழுப் பாட்டையும் பாட ஆரம்பித்தார். ஏதோ சூப்பர் சிங்கர் சீனியர் போட்டிக் களம் போல ராஜ்யசபா மாறியது. விஜிலா முழுப் பாட்டையும் பாட ஆரம்பித்ததை குரியன் எதிர்பார்க்கவில்லை.

போதும்.. பேசுங்க!

போதும்.. பேசுங்க!

விஜிலாவின் பாட்டுக்கு நடுவே குறுக்கிட்ட குரியன், போதும், உங்களது பிரச்சினையேப் பேசுங்க என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் விஜிலாவி்ன் "கானக் காதில்" அது ஏறவில்லை. தொடர்ந்து பாட்டுப் பாடியபடி இருந்தார்.

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

விஜிலா பாட்டுப் பாடியதைப் பார்த்து பல எம்.பிக்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர். அதிமுக எம்.பிக்களும் கூட சிரிக்க ஆரம்பித்தனர்.

2 நிமிடம் காலி

2 நிமிடம் காலி

இப்படியாக பாட்டுப் பாடியே 2 நிமிடத்தைக் காலி செய்த விஜிலா,கடைசியாக தான் பேச வந்த விஷயத்தைத் தொட்டார். காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இதுதான் விஜிலா சொன்ன கோரிக்கை. இதைச் சொல்வதற்குள் மேலும் சில காமெடிகளையும் அவர் செய்தார்.

அம்மா... அம்மா!

அம்மா... அம்மா!

அதாவது இந்தக் கோரிக்கையை வைப்பதற்குள் 3 முறை அம்மா பெயரை சொல்லி விட்டுத்தான் தனது கோரிக்கைக்கே அவர் வந்தார். ஆனால் அதற்குள் நேரம் முடிந்தது. மைக்கும் ஆப் ஆகி விட்டது. விஜிலாவும் பேச முடியாமல் உட்கார்ந்து விட்டார்.

விஜிலாவுக்குள் இப்படி ஒரு இசைக் குயிலா...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+