For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீட்டு என முதியவர் உடலை எடுக்காத மக்கள்.. 4 போலீஸ் சேர்ந்து தூக்கினர்.. கர்நாடகாவில் பரிதாபம்

கர்நாடகாவில் தீட்டு என்று கூறி 80 வயது முதியவர் உடலை எடுக்க அந்த ஊரை சேர்ந்த மக்கள் மறுத்து இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

மங்களூர்: கர்நாடகாவில் தீட்டு என்று கூறி 80 வயது முதியவர் உடலை எடுக்க அந்த ஊரை சேர்ந்த மக்கள் மறுத்து இருக்கிறார்கள். மங்களூர் அருகில் இருக்கும் குல்ஹாடி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

இதற்காக 4 போலீசார் வந்து உதவி இருக்கிறார்கள். அங்கு நிறைய மலைகள் இருப்பதால், உடலை அடக்கம் செய்யவும் அவர்கள் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

அந்த முதியவருக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறார். அவர் ஊர் மக்கள் எல்லோரிடமும் உதவி கேட்டு கெஞ்சி இருக்கிறார்.

என்ன ஆனது

என்ன ஆனது

அந்த முதியவருக்கு தற்போதுதான் 80 வயது முடிந்து இருக்கிறது. அவர் அந்த கிராமத்தில் மக்கள் நடமாடும் சாலையில் நடந்து செல்லும் போதே மயங்கி விழுந்து இருக்கிறார். நீண்ட நேரமாக மயங்கி அதே இடத்தில் கிடந்துள்ளார்.

மகன் வந்தார்

மகன் வந்தார்

இந்த நிலையில் அவரது மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் வருவதற்கு முன்பே அந்த முதியவர் மரணம் அடைந்து இருக்கிறார். அவர் உயிருக்கு போராடிய போதும் யாரும் அவருக்கு உதவவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

அந்த ஊரில் தற்போது திருவிழா நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் இறந்தவர்கள் உடலை யாரும் தொட கூடாது. ஆகவே அவரது உடலை தூக்கவும் மக்கள் மறுத்து இருக்கிறார்கள்.

போலீஸ் உதவி

போலீஸ் உதவி

இந்த நிலையில் அவர் பலரிடம் உடலை தூக்கும்படி கெஞ்சி இருக்கிறார். ஆனால் யாரும் உதவவில்லை. இதையடுத்து 3 போலீஸ் உதவிக்கு வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து அவருக்கு இறுதி சடங்கு செய்துள்ளனர்.

English summary
Villagers in Karnataka refuses to take body of old man due to Temple function rules. It happened in Gulgodi village in Koila of Dakshina Kannada district on Saturday. Police helped the dead man's son for final tributes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X