வேலைக்கு போகாததைத் தட்டிக்கேட்ட மனைவி, குழந்தைகளுக்கு கத்திக்குத்து... கணவரும் தற்கொலை முயற்சி
மும்பை: வேலைக்கு போகாமல் ஊர் சுற்றியதை தட்டிக் கேட்டதால் மனைவி மீது ஆத்திரம் கொண்ட கணவர், அவரையும், இரண்டு குழந்தைகளையும் கத்தியால் குத்தி, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை கிழக்கு விரார் பகுதியில் உள்ள மான்வேல்படா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா கதம் (40). இவரது மனைவி கல்பிதா நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு சாய் (10), அதர்வா (7) என இரண்டு குழந்தைகள்.

சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் கதம் ஊர் சுற்றி வந்துள்ளார். கல்பிதாவின் வருமானத்திலேயே குடும்ப செலவுகள் பார்த்து வந்துள்ளனர். இது தொடர்பாக அடிக்கடி கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று கணவருக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் சமையலறையில் இருந்த கத்தியால் கல்பிதாவைக் குத்தியுள்ளார் கதம். இதனை தடுக்க முயன்ற போது, தனது இரண்டு குழந்தைகளையும் அவர் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் தானும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தார், 4 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி கல்பிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு குழந்தைகளும் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்ட போதும், கதமின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கதம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications