இலங்கை கடற்கரையில் அனுஷ்கா சர்மா உடன் ஜாலி... சர்ச்சையில் சிக்கிய கோஹ்லி
மும்பை: கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் இலங்கை கடற்கரையில் ரொமான்ஸ்சில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான கோஹ்லி, இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து வருகின்றனர்.
இந்திய அணி நியூசிலாந்தில் சமீபத்தில் விளையாடிய போது விராத் கோஹ்லியை பார்ப்பதற்காக அனுஷ்கா சர்மா நியூசிலாந்து சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக சுற்றினர்.

இலங்கையில் ரொமான்ஸ்
இந்த நிலையில் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.
அனுஷ்கா சர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார். ஆசிய கோப்பை போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோஹ்லி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றார்.

கடற்கரையில் ஜாலி
சூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனர். கடந்த சில தினங்களாக காதலியுடன் ஜாலியாக இருந்து விட்டு கோஹ்லி நேற்று முன்தினம்தான் மும்பை திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பை போட்டி
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று வங்காளதேசம் புறப்பட்டது. இதற்காக அவர் அணியுடன் இணைந்து கொண்டார்.

சர்ச்சையில் கோஹ்லி
ஆசிய கோப்பை போட்டியில் டோனி இல்லாததால் கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இறுதிப் போட்டிக்கு கூட இந்தியா தகுதி பெறவில்லை. தோல்வி பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவர் ஆசிய கோப்பைக்கு பிறகு அனுஷ்கா சர்மாவுடன் இலங்கை கடற்கரையில் கும்மாளம் போட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நியூசிலாந்து போன அனுஷ்கா
கடந்தாண்டு ஆப்ரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன், மும்பை, வெர்சோவா பகுதியில் உள்ள, அனுஷ்கா சர்மாவின் வீட்டுக்கு கோஹ்லி வந்து, நீண்ட நேரம், அவருடன் பேசி விட்டு சென்றதாக கூறப்பட்டது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடச்சென்ற விராத் ஹோக்லியை பார்ப்பதற்கு அனுஷ்கா சர்மாவும் அங்கே போயிருந்தாராம்.

பரபரப்பான படங்கள்
விளையாட்டு நேரம் தவிர்த்து ஓய்வான நேரங்களில் விராத் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் ஆக்லாந்து நகரத்திலுள்ள வீதிகளில் சுற்றித்திரிந்த காட்சிகள், நெருக்கமாக நடந்து செல்வது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இலங்கை கடற்கரையில் அனுஷ்கா சர்மா உடன் சுற்றித்திரிந்த காட்சிகளும் வெளியாகியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications