ஓட்டுப் போடுங்க... விழிப்புணர்வு ஏற்படுத்தும் விராட் ஹோக்லி
டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஓட்டப்பதிவு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்களையும், கிரிக்கெட் வீரர்களையும் விளம்பர தூதர்களாக களமிறக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விளம்பரங்களை தயாரித்து ஊடகங்கள் மூலம் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்காக கிரிக்கெட் வீரர் விராட் ஹோக்லி, பாலிவுட் நடிகை சோகா அலி கான் ஆகியோரை விளம்பர தூதர்களாக நியமித்துள்ளது. ஊடகங்களின் தேர்தல் பிரச்சார விதிமுறைகளை அறிவித்த தேர்தல் ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த விளம்பர தூதர்கள் பிரிண்டிங் மற்றும் எலக்ட்ரானிக் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த விராட் ஹோக்லி, , மைதானத்தில் எனது பேட் பேசும் அதே போல் தேர்தல் தினத்தன்று மக்களின் ஓட்டு பேச வேண்டும் என்றார்.
அதேபோல் மற்றொரு விளம்பர தூதுவரான சோகா அலி, மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனக்கு இத்தகையதொரு வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நகர்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நகரத்தை மட்டுமின்றி நாட்டையும் உயர்த்தும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications