ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து.. தடம்புரண்ட பெட்டிகள்-12 பேர் பலி.. ஏராளமானவர்கள் காயம்
அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் இன்று இரவு 2 பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 12 பயணிகள் பலியான நிலையில் ஏராளாமனவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் விஜயநகரம் மாவட்டம் கந்தகப்பள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தண்டவாளத்தில் விசாகப்பட்டினம்- பலாசா ரயில் வந்து கொண்டிருந்தது.

திடீரென்று 2 ரயில்களும் மோதிக்கொண்டன. இதில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மொத்தம் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் காயமடைந்து அலறி துடித்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்டு பணியை தொடங்கினர். ஆனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு மின்சார கம்பங்கள் சேதமடைந்த நிலையில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் இருள் சூழ்ந்துள்ளது. மின்சாரம் இல்லாததால் அங்கு மீட்பு பணி தாமதமாகி உள்ளது.

இருப்பினும் ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை தொடங்கினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் முதலில் 3 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பலி எண்ணிக்கை என்பது 12 ஆக அதிகரித்துள்ளது. மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ரயில் விபத்தை தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீட்பு பணியை வேகமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது அலுவலக ட்விட்டர் பக்கத்தில், ‛‛ரயில் விபத்து எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாகப்பட்டினம் மற்றும் அனகாபல்லி மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் குறித்த விபரங்களை அவ்வப்போது தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications