சபரிமலையில் நாளை புதுவருடத்தை வரவேற்கும் “விஷு கனி காணல்” பூஜை
திருவனந்தபுரம்: கேரளாவில் அமைந்துள்ளசபரிமலை சுவாமி ஐய்யப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐய்யப்பனுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்று வருகிறது.
சித்திரை மாத பிறப்பான நாளை சபரி மலையில் சித்திரை விஷு கனிகாணுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையட்டி இன்று இரவு 10.50 மணிக்கு அத்தாள பூஜை முடிவடைந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும்.
சுவாமி ஐய்யப்பன் விக்ரகம் முன்பு கனி வகைகள், காய்கறிகள், புத்தாடைகள், தங்கம், வெள்ளி மற்றும் ரூபாய் நோட்டுக்கட்டுகள் படைக்கப்படும்.

சில்லறை நாணய படையல்:
மேலும் ஒரு பெரிய வெள்ளி பாத்திரத்தில் சில்லரை நாணயங்கள் படைக்கப்பட்டு இருக்கும். நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

விஷூ கனிகாணல்:
அதை தொடர்ந்து சுவாமி ஐய்யப்பனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு சித்திரை விஷு கனிகாணுதல் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு சில்லரை காசுகளை கைநீட்டமாக தந்திரி, மேல்சாந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் வழங்குவார்கள்.

செல்வம் பெருகும்:
இந்த காசுகளை பக்தர்கள் தங்கள் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். சித்திரை விஷுவையட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்:
அவர்கள் இன்றே ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்க தொடங்கி விட்டனர். நாளை பக்தர்கள் கூட்டம் இதைவிட அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications