முதல் கட்ட லோக்சபா தேர்தல்: அசாமில் 72.5%, திரிபுராவில் 83% வாக்குகள் பதிவானது!

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: லோக்சபா தேர்தலில் முதல் கட்டமாக இன்று அசாம், திரிபுராவில் 6 தொகுதிகளில் விறுவிறுப்பான அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது. அசாமில் மாலை 5 மணிவரை 72.5%, திரிபுராவில் 83% வாக்குகள் பதிவாகின.

16 வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இன்று தொடங்கி அடுத்த மாதம் 12-ந் தேதி முடிவடைகிறது.

முதல் கட்டமாக அசாமில் 5 தொகுதிகளிலும், திரிபுராவில் ஒரு தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

அசாமில் 5 தொகுதிகள்..

அசாமில் 5 தொகுதிகள்..

அசாமில் தேஜ்பூர், காலியாபார், ஜோர்காட் திப்ருகார், லக்கிம்பூர் ஆகிய 5 தொகுதிகளிலும் திரிபுராவில் திரிபுரா மேற்கு தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

அசாமில் 51 வேட்பாளர்கள்

அசாமில் 51 வேட்பாளர்கள்

அசாமில் 5 தொகுதிகளிலும் ஆளும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ், அசாம் கணபரிஷத், ஆம் ஆத்மி, அகில இந்திய பார்வர்டு பிளாக், சமாஜ்வாடி கட்சிகள் போட்டியிடுகின்றன. 5 தொகுதிகளிலும் மொத்தம் 51 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிரபலங்கள்..

பிரபலங்கள்..

இவர்களில் மத்திய அமைச்சர்கள் ரானீ நரா, பாபன் சிங் கட்டோவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிஜோய் கிருஷ்ண ஹண்டிக், அசாம் முதல்வர் தருண் கோகாயின் மகன் கவுரவ் கோகாய் ஆகியோர் முக்கியமானவர்கள்.

8,588 வாக்கு சாவடிகள்

8,588 வாக்கு சாவடிகள்

அசாமில் உள்ள 64 லட்சத்து 41 ஆயிரத்து 634 வாக்காளர்களுக்காக 8 ஆயிரத்து 588 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கு திரிபுரா தொகுதி..

மேற்கு திரிபுரா தொகுதி..

மேற்கு திரிபுரா தொகுதியில் ஒரு பெண் உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு 12 லட்சத்து 46 ஆயிரத்து 794 வாக்காளர்களுக்காக 1,605 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய வேட்பாளர்கள்

முக்கிய வேட்பாளர்கள்

இந்த தொகுதியில் கடந்த 11 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்த முறையும் அங்கு அந்த கட்சியின் வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தாவே போட்டியிடுகிறார். திரிபுராவில் எஞ்சிய மற்றொரு தொகுதிக்கு 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

பாதுகாப்பு..

பாதுகாப்பு..

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பதற்றம் மிகுந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

2-வது கட்ட தேர்தல்

2-வது கட்ட தேர்தல்

5 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் 9-ந் தேதி இரண்டாவது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகள் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து என 5 மாநிலங்களில் உள்ளன.

மே 16-ல் வாக்கு எண்ணிக்கை

மே 16-ல் வாக்கு எண்ணிக்கை

9 கட்ட தேர்தல்களும் முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெறுகிறது.

விறுவிறுவாக்குப் பதிவு

விறுவிறுவாக்குப் பதிவு

6 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி அசாம் மாநிலத்தில் 72.5% வாக்குகள் பதிவாகின. திரிபுராவில் 83% வாக்குகளும் பதிவாகின. அசாமில் வாக்குப் பதிவு 75%ஐ எட்டும் என தெரிகிறது. அசாமின் தேஸ்பூரில் 73%, ஜோர்காட்டில் 75%, லக்மிபூரில் 67%, திப்ரூகரில் 70%, கோலியாபாரில் 72 % வாக்குகள் பதிவாகி இருந்தன. பொதுவான இன்றைய வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+