வாகா எல்லையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி படம் வெளியீடு
டெல்லி: கடந்த 2ம் தேதி வாகா எல்லையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி வாகா எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் இந்தியாவை குறிவைத்து தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்டது என்று செய்திகள் வெளியாகின.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தாலிபானில் இருந்து பிரிந்த செயல்படும் ஜமாத்துல் அஹ்ரார் அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் ஜமாத்துல் அஹ்ரார் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இஹ்சானுல்லா இஹ்சான் வாகா எல்லையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வாகாவில் பாகிஸ்தான் ராணுவம் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்திய சகோதரர் ஹனீபுல்லாவின்(ஹம்ஸா) புகைப்படங்கள் என்று தெரிவித்து அவரின் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Pics of brother Haneefullah (Hamza) who carried out successful martyrdom operation on Murtad Pakistan Army at #Wagah pic.twitter.com/RaUsi3ds7D
— Ehsanullah Ehsan (@EhsanullahJA) November 13, 2014 25 வயதான ஹனீபுல்லா பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் முகமந்த் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்.
இஹ்சானின் ட்விட்டர் கணக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு முடக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை அவர் புதிய கணக்கு துவங்கி அதில் ஹனீபுல்லாவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications