வக்பு விவாதம்: ஆடு நனையுதே என ஓநாய் அழுவதா? இஸ்லாமியருக்கு பாஜக கரிசனையா? தயாநிதி மாறன் விளாசல்
டெல்லி: வக்பு வாரிய மசோதா விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆவணங்களுக்கும் மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜூ தெரிவித்த கருத்துகளும் வேறுபாடாக இருக்கின்றன; இவை இரண்டுமே ஒன்று என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிரூபித்துவிட்டால் நான் எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று லோக்சபாவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி காட்டமாக சவால் விடுத்தார்.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது சுமார் 12 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு லோக்சபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. வக்பு மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் வக்பு மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.

ராஜினாமா செய்ய தயாரா?
முன்னதாக லோக்சபாவில் வக்பு மசோதா மீதான நேற்றைய விவாதத்தில் ஆ.ராசா எம்பி பேசியதாவது: வக்பு வாரிய மசோதா விவகாரத்தில் உள்ள முழுமையான உண்மைகளை மறைத்து மத்திய அமைச்சர் திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்துகளும், கூட்டுக்குழுவின் ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பவையும் ஒன்றாக இல்லை. ஒன்றாக இருப்பதை நிரூபித்தால் என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.
எதற்காக புதிய பரிந்துரைகள்?
1970 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 1984 வக்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1995 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தினர் கோரிக்கை படி இரண்டு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 2013 ஆம் ஆண்டும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது எந்த பரிந்துரை அடிப்படையில் இந்த புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?.
வக்ஃப் வாரிய திருத்த சட்டம் ஒட்டு மொத்த நாட்டின் விருப்பம் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், இதற்கு நேரெதிராக தமிழ்நாட்டில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அப்படியென்றால், அது ஒட்டுமொத்த நாட்டின் விருப்பம் அல்ல. இந்த வேற்றுமையை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அது… pic.twitter.com/6hSpEzGlR5
— DMK (@arivalayam) April 2, 2025
மத்திய அரசுக்கு மதம்தான் பிரச்சனை
தமிழ்நாட்டில் இந்து அறநிலைய துறை நிர்வகிக்கும் கல்லூரிகளில் இஸ்லாமியர்களை ஆசிரியர்களாக நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தற்போது வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கும் திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசுக்கு மதம் மட்டும்தான் பிரச்னையாக உள்ளது.
வக்பு சொத்துகளை அபகரிக்க முயற்சி
ஒட்டுமொத்த வக்பு சொத்துக்களையும் மத்திய பாஜக அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. வக்பு சொத்துக்கள் என அறிவிக்கப்பட்டதை அவை வக்ஃப் சொத்துக்கள் தானா என்று வரையறுக்கும் சட்டப்பிரிவு அபத்தமானது. இந்த சட்டப்பிரிவின் அதிகாரம் முழுவதும் அரசிடம் இருப்பது மிகவும் ஆபத்தானது.
தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்பு தீர்மானம்
வக்பு வாரிய திருத்த சட்டம் ஒட்டு மொத்த நாட்டின் விருப்பம் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், இதற்கு நேரெதிராக தமிழ்நாட்டில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அப்படியென்றால், அது ஒட்டுமொத்த நாட்டின் விருப்பம் அல்ல. இந்த வேற்றுமையை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அது தேசிய ஒருமைப்பாடுக்கு எதிரானது. இவ்வாறு ஆ.ராசா எம்பி பேசினார்.
தயாநிதி மாறன் எம்பி பேச்சு
வக்பு மசோதா மீது திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது: வக்பு மசோதாவை கொண்டுவருவதற்கு முக்கிய காரணமானது எது என்றால் 71, 62, 36. இது என்ன தெரியுமா? 2014-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாஜக வென்ற எம்பி சீட்டுகள் 71. 2019-ம் ஆண்டு உ.பி.யில் பாஜக வெற்றி பெற்ற எம்பி சீட்டுகள் எண்ணிக்கை 62. 2024-ம் ஆண்டு உ.பி.யில் பாஜக வெற்றி பெற்ற எம்பிக்கள் எண்ணிக்கை 36.
அயோத்தியை முன்வைத்து 71 இடங்கள்
பாபர் மசூதியை இடிக்க வேண்டும்; அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்; ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லி 71 இடங்களைப் பிடித்தார்கள். இதன் பின்னர் சரிந்துவிட்டது பாஜகவின் எண்ணிக்கை.
பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு அரசியலைக் கண்டித்தும், வக்ஃப் மசோதாவை எதிர்த்தும்,
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) April 2, 2025
சமத்துவக் காவலர் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு@mkstalin அவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் இன்று!#WaqfAmendmentBill #WaqfBill @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing… pic.twitter.com/4s30evfeRM
இந்துக்கள் நிலத்தையும் அபகரித்தது உ.பி. அரசு
அயோத்தியில் பாபர் மசூதியை இஸ்லாமியர்களிடம் இருந்து எடுத்துக் கொண்டனர்; அதேபோல இந்துக்களிடம் இருந்தும் 4,500 ஏக்கர் நிலத்தையும் எடுத்துக் கொண்டது உ.பி. அரசு. இந்த நிலங்கள் ஏழை விவசாயிகளுடையது. விமான நிலையம் கட்டுவதற்கும், சாலை வசதிகள் போடுவதற்கும் பணக்காரர்கள் தங்குவதற்கான 5 நட்சத்திர ஹோட்டல்களை கட்டுவதற்கும் இந்த நிலத்தை எடுத்துக் கொண்டனர். ஆனால் இதன் விளைவு என்ன? அயோத்தியில் கூட சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்தான் வெற்றி பெற்றார்.
ஆடு நனைகிறது என ஓநாய் அழுவதா?
இந்துக்கள்- முஸ்லிம்களிடையே வெறுப்பை உருவாக்க, வெறுப்பு அரசியலை உருவாக்க, பிரிவினை அரசியலை செய்தால் மட்டுமே பாஜக வெல்ல முடியும். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதா? இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என பாஜக வருத்தப்படுகிறதா? இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து மசோதா கொண்டு வந்தது யார்? அமித்ஷாதானே. காஷ்மீர் மசோதாவை கொண்டு வந்தது அமித்ஷாதானே.. சிஏஏ மசோதாவை கொண்டுவந்தது அமித்ஷாதானே.. அப்போது, ஈழத் தமிழருக்காக நாங்கள் கேட்டோம்.. உங்கள் காதுகளில் விழவில்லை.
உங்களுக்கு வந்தால் ரத்தம்.. எங்களுக்கு தக்காளி சட்னியா?
இன்றைக்கு வக்பு சொத்துகளை குறைந்த விலைக்கு கொடுப்பதாக பாஜக கவலைப்படுகிறது. உங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நீங்கள் ஏர் இந்தியாவை விற்பனை செய்தீர்களே? வெறும் ரூ16,000 கோடிக்கு ஏர் இந்தியாவை விற்பனை செய்துவிட்டு அதன் ரூ63,000 கோடி கடனை மத்திய அரசுதான் கட்டியது. உங்கள் நண்பர்களான, அதானி- அம்பானிகளுக்கு கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்திர்களே. அதுவும் ரூ4.5 லட்சம் கோடி கடன்களை அதிகாரப்பூர்வமாக தள்ளுபடி செய்தீர்களே?
தமிழ்நாட்டின் வக்பு வாரியமும் பெண்களும்
தமிழ்நாட்டில் வக்பு வாரியத்துக்கு ஒரு பெண் தலைவராக இருந்திருக்கிறார். இப்போதும் வக்பு வாரியத்தில் 2 பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதில் ஒருவர் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமதுவின் மகள். ஆக, நீங்கள் புதியதாக ஏதோ ஒன்றை செய்வது போல செய்கிறீர்களே? வரும் தேர்தலில் உ.பி.யில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம். உ.பியில் வெற்றி பெற்றால்தான் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முடியும். அதற்குதான் இந்த மசோதா. இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.
முன்னதாக வக்பு மசோதா தொடர்பான ஆடாளுமன்ற நிலைக்குழுவில் திமுகவின் ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் திமுக, வக்பு மசோதாவை கடுமையாக எதிர்த்தது. அப்போத் திமுக உள்ளிட்ட கட்சிகள் தந்த 500க்கும் மேற்பட்ட திருத்தங்களை நாடாளுமன்ற நிலைக்குழு நிராகரித்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. இதனால் வக்பு மசோதா சட்டமானால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திமுக எம்பி ஆ.ராசா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications