For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னங்க இதெல்லாம்.. கவனிச்சீங்களா.. அப்படியே "அவங்கள" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை.. பரபர வீடியோ

: இஸ்லாமிய மாணவ - மாணவியர் நடுவே திரை அமைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது

Google Oneindia Tamil News

திருச்சூர்: கேரளாவில் அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த இஸ்லாமிய கருத்தரங்குதான், சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சையையும் விவாதத்தையும், கிளப்பி விட்டு வருகிறது.

கேரளாவில் என்ன நடந்தது என்பதை பார்ப்பதற்கு முன்பு, ஆப்கன் சம்பவத்தை இங்கு ஒருமுறை நினைவுகூர வேண்டி உள்ளது.

முன்னாள் அமைச்சர் ஏமாற்றியதாக கொடுத்த புகார்.. நடிகை திடீர் பல்டி.. வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்! முன்னாள் அமைச்சர் ஏமாற்றியதாக கொடுத்த புகார்.. நடிகை திடீர் பல்டி.. வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்!

ஆப்கன் பெண்களை பொறுத்தவரை, கடந்த 20 வருடங்களாக நிம்மதியாக இருந்தனர்.. கல்வி கற்றனர்.. ஓரளவு சுதந்திரம் பெற்றனர்.

 ஆடைக்கட்டுப்பாடு

ஆடைக்கட்டுப்பாடு

ஆனால், இப்போது அந்த நிலைமை அங்கு காணப்படவில்லை மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தாலிபன்கள், பழையபடியே கெடுபிடிகளை கையில் எடுத்துள்ளனர்.. ஆட்சிக்கு வந்த முதல்நாள், பெண்களுக்கு சம நீதி, சம உரிமை வழங்குவோம் என்று சொன்னார்கள்.. ஆனால், இதுநாள் வரை சொன்னதை செய்யவில்லை.. ஆடைக் கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் கொண்டு வந்துவிட்டனர்.. கல்விதுறையிலும் நுழைந்துவிட்டனர்.. பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர் என்றும், அறிவித்துள்ளனர்..

 ஆப்கன் பெண்கள்

ஆப்கன் பெண்கள்

மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர். பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை.. ஸ்கிரீன் உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.. இதனால், தாலிபன்களிடம் ஆப்கன் பெண்கள் சிக்கி தவியாய் தவித்து வருகின்றனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆப்கன் பெண்களை நினைத்து உலக நாடுகளே கவலைக் கொண்டு வரும் நிலையில், நம்ம இந்தியாவில், அதுவும் கடவுளின் தேசம் என்று சொல்லக்கூடிய பக்கத்து மாநிலத்திலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. கேரளாவில் உள்ள, திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரியில் இஸ்லாமிய கருத்தரங்கம் நடைபெற்றது.. இதில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஆனால், இந்த மாணவர்களை ஒருபக்கமும், மாணவிகளை ஒருபக்கமும் கருத்தரங்கில் உட்கார வைத்திருந்தனர். அதுமட்டுமல்ல, இவர்களுக்கு நடுவே ஸ்கிரீன் ஒன்று போடப்பட்டிருந்தது...

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

திரையால் மாணவர்களும், மாணவியரும் பிரிக்கப்பட்ட போட்டோவை, இந்த கருத்தரங்கு அமைப்பாளரான அப்துல்லா பசில் என்பவர், சோஷியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார்... அத்துடன், "இந்தப் படத்தை பார்த்து எரிச்சல்படுவோர், சமூக வலைதளங்களில் தங்கள் எரிச்சலை பகிரட்டும்" என்றும் அப்துல்லா தெரிவித்துள்ளார். தலிபான் ஆட்சியில் நடப்பதுபோல, திருச்சூர் மருத்துவ மாணவ, மாணவியரை, ஸ்கிரீன் வைத்து பிரித்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.... பல்வேறு அமைப்புகள் இதற்கான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

English summary
was it true and Muslim group with girls and boys separated by a sheet in Thrissur Medical College Hospital இஸ்லாமிய மாணவ - மாணவியர் நடுவே திரை அமைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X