பாகிஸ்தான் ட்ரோன்களை சிதறவிட்ட இந்தியா.. தூரத்தில் வரும்போதே நொடியில் தகர்த்த S400 அமைப்பு! வீடியோ
ஜம்மு: இந்தியா பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் திடீரென பாகிஸ்தான் ஜம்மு உட்பட எல்லையோ மாவட்டங்களில் பெரியளவில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலை எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. இதற்கிடையே எஸ்400 அமைப்பு எப்படி இந்தியாவைப் பாதுகாக்கிறது என்பது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதல் மூலம் இந்தப் பதற்றத்தை ஆரம்பித்து வைத்ததே பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பதிலடி கொடுக்கவே இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 100 தீவிரவாதிகளைக் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்
இந்திய ராணுவத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. காஷ்மீர் தொடங்கி பஞ்சாப் உட்படப் பல எல்லையோர மாவட்டங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக எல்லையில் பல்வேறு இடங்களில் பிளாக் அவுட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு சைரன்கள் அலறும் நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பித் தாக்குதல் நடத்தினாலும் இதுவரை எந்தவொரு சேதாரமும் ஏற்படவில்லை. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான எஸ் 400 வெற்றிகரமாக மக்களைப் பாதுகாத்து வருகிறது. இதற்கிடையே எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு எல்லையோரப் பகுதிகளை எப்படிப் பாதுகாத்தது என்பதைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
So we used S400 to counter Pakistan!!
— Chauhan (@Platypuss_10) May 8, 2025
Visuals coming from Jammu!! pic.twitter.com/ESS3bC6iXt
ஒரு ட்ரோன் கூட தப்பவில்லை
இது அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோ இல்லை. தாக்குதல் சமயத்தில் ஜம்முவில் இருந்த இளைஞர் ஒருவர் அதை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவே இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு ட்ரோனை கூட எஸ்400 விடவில்லை.. அனைத்தையும் வீழ்த்துவிடுகிறது.
என்ன நடக்கிறது
அதாவது பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் இலக்குகளை நோக்கி வருகிறது. ஆனால், அதைத் தொலைவிலேயே அடையாளம் கண்ட எஸ்400 பாதுகாப்பு அமைப்பு, அது இலக்கை நெருங்கும் முன்பே ட்ரோனக்ளை தாக்கி அழிக்கிறது. இப்படி ஒன்று மட்டும் இல்லை பல ட்ரோன்களை எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
S-400 ஏவுகணை
S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ரஷ்யா உருவாக்கிய அதிநவீனப் பாதுகாப்பு அமைப்பாகும். இது வான் பரப்பில் நீண்ட தூரத்திற்குப் பாதுகாப்பை அளிக்கும். இந்த எஸ் 400 பாதுகாப்பு அமைப்பால் 600 கிமீ தொலைவில் வரும் ஏவுகணை அல்லது ட்ரோன்களை கூட துல்லியமாக டிராக் செய்ய முடியும். அந்தளவுக்கு இந்த அமைப்பிற்கு வலுவான ஒரு ரேடார் இருக்கிறது. மேலும், 400 கிமீ தொலைவில் வரும் போது அதைத் தாக்கியும் அழிக்கவும் முடியும். அந்த அளிக்கும் திறனைத் தான் நாம் இந்த வீடியோவில் பார்த்திருப்போம்.
தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் உட்பட எல்லையோர மாவட்டங்களில் பிளாக் அவுட் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வசிக்கும் இடங்கள், பாதுகாப்புப் படைத் தளங்கள் உட்பட உள்கட்டமைப்புகளை எளிதாக அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்கவே இதுபோன்ற பிளாக் அவுட் அமல்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications