விமானத்திற்குள் திடீரென கொட்டிய தண்ணீர்.. தவித்த ஏர் இந்தியா பயணிகள்.. கொட்டி தீர்த்த நெட்டிசன்கள்
அமிர்தசரஸ்: ஏர் இந்தியா விமானத்திற்குள் திடீரென தண்ணீர் கொட்டியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து லண்டன் நோக்கி சென்ற விமானத்திற்குள் திடீரென மழை நீர் போல தண்ணீர் கசிந்துள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் இதனால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்களும் தங்கள் ஆதங்களை கொட்டி வருகின்றர். இது குறித்த விவரங்கள் வருமாறு:-

அமிர்தசர்சில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் பி787 என்ற விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயணிகள் நிரம்பியிருந்தனர். விமானம் புறப்பட்டு சென்று கொண்டு இருந்த போது திடீரென லக்கேஜ் வைக்கும் ஒரு பகுதியில் தண்ணீர் கசிய தொடங்கியது. டவுன் பஸ்சில் போல தண்ணீர் கசிகிறதே என ஒரு நிமிடம் பயணிகள் திகைத்தனர். விமானத்தின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் இப்படி தண்ணீர் கசித்ந்தது.
மழை போல: இதனால், அந்த இடத்தில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சில நிமிடங்கள் மட்டும் ஓடும் அந்த வீடியோவில், விமானத்தின் ஒருபக்கத்தில் உள்ள லக்கேஜ் ஹோல்டரில் இருந்து தண்ணீர் கசிகிறது. விமானத்தின் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் கசிந்ததால் மழை போல் தண்ணீர் கொட்டுகிறது.
விமான பணிப்பெண்கள் தண்ணீர் கசியும் பகுதிகளை துணியைக் கொண்டு அடைத்துள்ளனர். தண்ணீர் கசிந்த இருக்கைகளில் இருந்த பயணிகள் வேறு இடத்தில் அமர வைக்கப்பட்டனர். விமானத்திற்குள் தண்ணீர் கசியும் வீடியோவை பகிர்ந்துள்ள நெட்டிசன் ஒருவர், ஏர் இந்தியை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். எங்களுடன் பறங்கள் இது பயணம் அல்ல.. அற்புதமான அனுபவம்" என்று கேலியாக கூறியுள்ளார்.
Air India ….
— JΛYΣƧΉ (@baldwhiner) November 29, 2023
fly with us – it's not a trip …
it's an immersive experience pic.twitter.com/cEVEoX0mmQ
டவுன் பஸ்: பயணிகளுக்கான சேவை விதிகளை மீறியதற்காக அண்மையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் 10 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்து இருந்தது. இதனிடையே, விமானத்திற்குள் தண்ணீர் கசிந்த விவகாரம் தொடர்பாக கருத்து கூறியுள்ள ஏர் இந்தியா, எதிர்பாராத இந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளது.
ஏர் இந்தியா தேசியமாகக்கப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தான் டாடா குழுமம் அந்த நிறுவனத்தை தன்வசப்படுத்தியது. டாடா குழுமம் வாங்கியதில் இருந்து ஏர் இந்தியாவில் சேவையின் தரம் அதிகரிக்கும் என பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், பயணிகளுக்கு கசப்பான அனுபவம் ஏர் இந்தியா விமானத்தில் கிடைத்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் டவுன் பஸ் ரேஞ்சுக்கு விமானம் மாறிவிட்டதே என கேலியாக கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.
-
1000 கிமீ நீண்ட மழை மேகங்கள்.. கொட்டி தீர்க்குதே கனமழை.. இப்படி ஒன்று நடந்ததே இல்லை போல -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications