மே.வங்கத்தில் நிறைவேறிய சட்ட மேலவை தீர்மானம்.. முதல்வராக நீடிக்க மம்தாவின் பிளான்.. பாஜக கொதிப்பு!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபையில் இன்று சட்ட மேலவைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் முதல்வர் மம்தா பானர்ஜி மேலவை உறுப்பினராக பதவி ஏற்று, 6 மாதங்களுக்குள் சட்டசபை இடைத்தேர்தலை சந்திக்காமலே முதல்வாராக நீடிக்க முடியும். பாஜகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில்தான் நாட்டில் சட்ட மேலவை உள்ளது. 2019-ம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீரிலும் சட்டமேலவை இருந்தது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் சட்டமேலவை உருவாக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் உறுதி அளித்திருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் இன்று மேற்கு வங்க சட்டசபையில் சட்ட மேலவையை உருவாக்குவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பாஜக கடும் எதிர்ப்பு
இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது முதல்வர் மமதா பானர்ஜி சட்டசபையில் இல்லை. இத்தீர்மானத்தை பாஜக கடுமையாக எதிர்த்தது. இந்த தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி சட்ட மேலவை என்பது 23 உறுப்பினர்களைக் கொண்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் உட்பட 7,8 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு
இப்போது சட்டமேலவை மூலம் கொல்லைப்புறமாக அவர்கள் நுழைய முயற்சிக்கின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல. நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது. எங்களைப் பொறுத்தவரை சட்ட மேலவையை நாங்கள் எதிர்ப்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 196 பேர் ஆதரவாகவும் 69 பேர் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால் இத்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் தர வேண்டியுள்ளது.

மமதாவுக்கு நெருக்கடி
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். வரும் நவம்பர் மாதத்துக்குள் மமதா பானர்ஜி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் பதவி விலக வேண்டும்.

சட்ட மேலவை முதல் கட்டம்
கொரோனா பரவல் இருப்பதால் இடைத்தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தவில்லை. இந்த நிலையில்தான் சட்ட மேலவையை உருவாக்கி எம்.எல்.சியாகும் முயற்சிகளை மமதா மேற்கொண்டுள்ளார். இதன் முதல் கட்டமாக சட்டசபையில் சட்ட மேலவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க வேண்டும் என்பதால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன்












Click it and Unblock the Notifications