இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டமாம்- 4 பாஜக அலுவலகங்களை கைப்பற்றிய திரிணாமுல் காங்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டமாம் - திரிணாமுல் காங் படு குஷி

    கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் 4 பாஜக அலுவலகங்களை கைப்பற்றியுள்ளனர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்.

    மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல்களில் வெற்றி பெறும் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் அலுவலகங்களை கைப்பற்றுவதையும் ஒரு நடவடிக்கையாக வைத்திருக்கின்றனர். திரிபுராவில் பாஜக ஆட்சியில் அமர்ந்ததும் இடதுசாரிகளின் அலுவலகங்கள் கைப்பற்றப்பட்டு பாஜகவின் கொடிகள் ஏற்றப்பட்டன.

    WB By Election Results: TMC workers capture 4 BJP offices

    இதனையடுத்தி இரு கட்சியினரிடையே பெரும் மோதல் வெடித்தது. மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இடதுசாரிகளின் அலுவலகங்கள் கைப்பற்றப்பட்டு டிஎம்சி கொடிகள் ஏற்றப்பட்டன. இதனால் திரிணாமுல்- இடதுசாரி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது.

    இப்படி அரசியல் கட்சிகளின் அலுவலகங்களையே கைப்பற்றி கொடி ஏற்றுவது ஒரு அரசியல் கலாசாரமாக கருதப்பட்டு வருகிறது. தற்போது மேற்கு வங்கத்தில் 3 சட்டசபை தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றது.

    இதனை கொண்டாடும் வகையில் வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் பன்பூர், நயிகட், மத்ரால் மற்றும் பாரக்பூர் ஆகிய இடங்களில் இருந்த பாஜக அலுவலகங்களை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கைப்பற்றினர். அந்த அலுவலகங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வர்ணத்தை பூசி கட்சி கொடி ஏற்றினர்.

    இதனால் அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+