மே.வங்க விவகாரம்... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்- மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு
Recommended Video
கொல்கத்தா/ டெல்லி; மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதைத் கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவரை நோயாளியின் உறவினர் தாக்கினார். இதனையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மேற்கு வங்கத்தில் ஏற்கனவே ஆளும் திரிணாமுல் அரசுக்கு எதிராக பாஜகவினர் ஒருபக்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சி மருத்துவர்களை பாஜகதான் தூண்டுவதாக கூறி முதல்வர் மமதா பானர்ஜி கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப காலக்கெடு விதித்தார் மமதா பானர்ஜி. ஆனால் அதை நிராகரித்து மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
லட்சக்கணக்கான மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்ததால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சில மருத்துவர்கள் தலையில் காயக்கட்டு போட்டு அடையாள போராட்டத்தை மேற்கொண்டனர்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications