காவிரி தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி
காவிரி தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video

பெங்களூர்: காவிரி தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி அளித்து இருக்கிறார்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும்.
கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. கர்நாடகாவிற்கு அதிகமாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
இதுகுறித்து தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''காவிரி தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசியில் எங்களுக்கு கொஞ்சம் நீதி கிடைத்துள்ளது'' என்று சித்தராமையா குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
