Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛ரொம்ப பெருமையாக இருக்கு’.. மோடி வேட்புமனுவால் தென்காசியில் பூரித்த வாரணாசி கலெக்டரின் பெற்றோர்!

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். வாரணாசி கலெக்டராக உள்ள உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் கலெக்டராக தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜலிங்கம் உள்ளார். அவரிடம் தான் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை ராஜலிங்கத்தின் தாய்-தந்தை பெருமையாக கூறியுள்ளதோடு, ஐஏஎஸ் ராஜலிங்கம் எப்படிப்பட்டவர் என்பதை விவரித்துள்ளனர்.

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி முதல் முதலாக கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அவர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத் மாநிலம் வதோதராவில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமரானார். இதில் வதோதரா எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார். வாரணாசி எம்பியாக அவர் 5 ஆண்டு பிரதமர் பதவியை நிறைவு செய்தார்.

We are proud says Varanasi Collector Rajalingam parent who lived in Tenkasi after PM Modi filed his nomination

அதன்பிறகு 2019 லோக்சபா தேர்தலிலும் பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இப்போது மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி களமிறங்கி உள்ளார். இந்த தொகுதிக்கு ஜுன் 1ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாக சென்று பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக அந்த மாவட்ட கலெ க்டர் ராஜலிங்கம் உள்ளார். ராஜலிங்கத்திடம் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் வேட்புமனுவை பெற்ற ராஜலிங்கம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகின. அதாவது ராஜலிங்கம் தமிழ்நாட்டை சேர்ந்தவர். தென்காசி மாவட்டம் தான் அவரது சொந்த ஊராகும். திருச்சி என்ஐடியில் பொறியியல் படிப்பை முடித்த அவர் யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐஏஎஸ் ஆகி வாரணாசி கலெக்டராக பொறுப்பு வகித்தது தெரியவந்தது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் வேட்பு மனு வாங்கிய வாரணாசி கலெக்டர் ராஜலிங்கத்தின் தாய்-தந்தை அதனை பெருமை என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக ராஜலிங்கத்தின் தந்தை சுப்பையா - தாய் மகேஷ் மாலையம்மாள் ஆகியோர் பெருமையாக கூறியுள்ளனர். இதுபற்றி கலெக்டர் ராஜலிங்கத்தின் தந்தை சுப்பையா கூறியதாவது: நான் இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். என் மனைவி நகராட்சி வார்டு கவுன்சிலராக இருந்தார். என் மகன் பெயர் ராஜலிங்கம். புளியங்குடியில் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்தார். அதற்கு அடுத்தப்படியாக மத்திய அரசின் நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து முடித்தார். அதன்பிறகு யுபிஎஸ்சி தேர்வு எழுதினார்.

2006ல் ஐபிஎஸ்ஸில் பணி கிடைத்தது. ஐபிஎஸ் பணியை அவர் செய்தார். அதன்பிறகு 2வது முறையாக தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக தேர்வானார். ஐபிஎஸ், ஐஏஎஸ் பணிகள் 2ம் உத்தர பிரதேசத்தில் தான் கிடைத்தது. உத்தர பிரதேசத்தில் குஷி நகரில் ராஜலிங்கம் வேலை செய்த வந்தார். அதன்பிறகு வாரணாசிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியிடம் வேட்புமனு பெற்று கொண்டார். இது எங்களுக்கும் பெருமை. தென்காசி மட்டுமின்றி தமிழகத்துக்கே பெருமை'' என்றார்.

இதுபற்றி கலெக்டர் ராஜலிங்கத்தின் தாய் மகேஷ் மாலையம்மாள் கூறுகையில், ‛‛ என் மகன் பள்ளி காலங்களில் காலையில் நேரத்துக்கே எழுந்து பள்ளிக்கு செல்வார். மாலையில் ஹோம் வொர்க் செய்வார். அவரது கடமையை ஒழுங்காக செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். நூலகத்துக்கு செல்வார். கிரிக்கெட்டுக்கு விளையாட செல்வார். இதற்கு அனைத்தும் நேர அட்டவணை வைத்திருந்தார்.

We are proud says Varanasi Collector Rajalingam parent who lived in Tenkasi after PM Modi filed his nomination

திருச்சி கல்லூரியில் படித்தபோது அவருக்கு வேலை கிடைத்தது. 4 ஆண்டு படிப்பை முடிக்கும் முன்பே பெங்களூர் கம்பெனியில் அழைப்பு வந்தது. அங்கு 3 மாதம் வேலை செய்தார். அதன்பிறகு வேலை வேண்டாம் என்றார். அதன்பிறகு உளவுத்துறையில் வேலை கிடைத்தது. அதையும் வேண்டாம் என்றார்.

ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று சென்னையில் படித்தார். முதலில் ஐபிஎஸ் கிடைத்தது. அந்த வேலை பார்த்து கொண்டே 2வது முறையாக யுபிஎஸ்சி தேர்வு எழுதினார். அதி்ல தான் ஐஏஎஸ் கிடைத்தது. காசி விஸ்வநாதர் அருளோடு அந்த பணி கிடைத்தது. ரொம்ப நேர்மையாக இருப்பார். கடமையோடு இருப்பார். கண்ணியமாக இருப்பார். தெய்வபக்தியோடு இருப்பார். சாமி மீது நம்பிக்கை உள்ளவர். அவர் மகனாக கிடைத்தது வரம் தான் எங்களுக்கு'' என பெருமையாக கூறினார்.

ராஜலிங்கம் உத்தர பிரதேசத்தில் சுல்தான்பூர், குஷிநகரில் கலெக்டராக பணியாற்றினார். அதன்பிறகு தான் குஷிநகரில் இருந்து வாரணாசிக்கு மாற்றம் செய்யப்பட்டார். குஷிநகரில் பணியாற்றிய போது அவரது செயல்பாடுகளை பிரதமர் மோடி தோளில் தட்டிப் பாராட்டி இருந்தார். பின்னர் 2022ம் ஆண்டு பிரதமர் மோடியின் தொகுதி வாரணாசி கலெக்டராக ராஜலிங்கம் நியமிக்கப்பட்டார். அன்று முதல் அவர் வாரணாசி கலெக்டராக பணியாற்றி வருகிறார். தற்போது வாரணாசி லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரியாக அவர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+