நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் தேவை... பல்லம் ராஜூ தகவல்
ஜாம்ஷெட்பூர்: நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றில் நாம் விரைவாக முன்னேறி வருகிறோம். ஆனால் தரமான கல்விச்சேவையில் இன்னும் அதிக முன்னேற்றம் தேவைப்படுகிறது.
நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனினும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில், ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் தீவிரமாக அமலில் உள்ளது. மேலும், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து கல்வித் துறையில் பல்வேறு வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
மதிய உணவு திட்டம்
பீகாரில் கடந்த ஜூலை மாதம் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள், உயிரிழந்த சம்பவத்தில் உண்மை விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, மதிய உணவு திட்டத்தை மிகுந்த பாதுகாப்புடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளோம். மேலும், இதைப்போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் ஏற்பட்டுவிடாமல் இருக்க தேசிய அளவிலான அறிவுரைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது" என்றும் பல்லம் ராஜூ கூறினார்.Click Here
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications