காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.. விஜயகாந்த் பேட்டி

காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்து இருக்கிறார்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

We should welcome the Cauvery verdict says Vijayakanth

தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும். கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு.

இதுகுறித்து தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் '' காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே வஞ்சனையை பார்க்க கூடாது. மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும் '' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ''காவிரி பிரச்சனைக்கு நதிகள் இணைப்புதான் தீர்வாக அமையும். மத்திய அரசு உடனடியாக நதிகளை இணைக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+