மேகாலயாவில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்.. இன்று இரவே ஆட்சியமைக்க உரிமை கோருவோம்.. காங். தடாலடி!
மேகாலயாவில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷில்லாங்: மேகாலயாவில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேகாலயா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் 59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் காங்கிரஸ் அதிகபட்சமாக 21 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
என்பிபி 19 தொகுதிகளையும் பாஜக 2 தொகுதிகளையும் கைப்பற்றின, யுடிபி, சுயேச்சை உள்ளிட்டவை 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மேகாலயாவில் தொங்கு சட்டசபை
எந்தக்கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை கைப்பற்றாததால் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக மேகாலயாவில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் தற்போதும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது.

ஆட்சியமைக்க தீவிரம்
இந்நிலையில் தற்போது அதிக இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மேகாலயாவில் ஆட்சியமைப்பது குறித்து ஆராய அக்கட்சியின் மூத்த தலைவர்களான அகமது பட்டேல் மற்றும் கமல்நாத்தை காங்கிரஸ் தலைமை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

நாங்கள்தான் ஆட்சியமைப்போம்
செய்தியாளர்களிடம் பேசிய அகமது பட்டேல் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்றது போல் மீண்டும் நடக்காது என்றார். இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், மேகாலயாவில் நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என்பது தெளிவாகியுள்ளது என்றார். மக்களின் எண்ணம் காங்கிரஸ் ஆட்சியில் வெளிப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இரவே உரிமைகோருவோம்
மற்றவர்களுடன் நாங்கள் தொடர்பில் தான் உள்ளோம் என்றும் மற்றவர்களும் எங்களுடன் தொடர்பில் தான் உள்ளனர் என்றும் அவர் கூறினார். மேலும் இன்று இரவே ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவோம் என்றும் அவர் கூறினார். பாஜக பணத்தை பயன்படுத்தி ஆட்சியமைப்பதில் இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கமல்நாத் குற்றம்சாட்டினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications