For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக - காங். மறைமுக கூட்டு.. பசு பராமரிப்புக்கு நாள்தோறும் ரூ.40 வழங்குவோம்.. அரவிந்த் கெஜ்ரிவால்!

Google Oneindia Tamil News

ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தால் பசு பராமரிப்புக்காக நாள்தோறும் ரூ.40 வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆம் ஆத் மி கட்சி தரப்பில் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து குஜராத்திலும் ஆட்சியமைக்க திட்டமிட்டு வருகிறது. இதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தொடர்ந்து குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

 நம்பிக்கை துரோகம்! வாய்ப்பே இல்லை.. என்னால் முடியாது! காங். தலைவர் தேர்தல்.. ஓப்பனாக விளாசிய கெலாட் நம்பிக்கை துரோகம்! வாய்ப்பே இல்லை.. என்னால் முடியாது! காங். தலைவர் தேர்தல்.. ஓப்பனாக விளாசிய கெலாட்

அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

இந்த நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மானுடன் குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பணிகளை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்திற்கு அறிவித்த ரூ.20 ஆயிரம் கோடி தொகுப்பு வெறும் ஒப்பந்ததாரர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மட்டுமே பயனளிக்கும். பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று விமர்சித்தார்.

மக்களின் தேவை

மக்களின் தேவை

தொடர்ந்து, குஜராத் மக்கள் சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, மின்கட்டண குறைப்பு, தண்ணீர், விலைவாசியை கட்டுபடுத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புகிறார்கள். ஆம் ஆத்மி கட்சி தரப்பில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். அதையே குஜராத்திலும் செயல்படுத்துவோம். அதுமட்டுமல்லாமல் டெல்லியில் பசு ஒன்றின் பராமரிப்புக்காக நாள்தோறும் ரூ.40 வழங்கி வருகிறோம்.

பசு பராமரிப்புக்கு ரூ.40

பசு பராமரிப்புக்கு ரூ.40

இதில் ரூ.20 டெல்லி அரசும், ரூ.20 மாநகராட்சி நிர்வாகமும் வழங்குகின்றன. குஜராத்தில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியமைத்தால், அங்கும் பசு பராமரிப்புக்காக நாள்தோறும் ரூ.40 வழங்குவோம். பால் கறக்காத பசுக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்காக பராமரிப்பு கொட்டகைகள் அமைக்கப்படும். மாநிலத்தில் பசுக்களின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆம் ஆத்மி அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

உளவுத்துறை அறிக்கை

உளவுத்துறை அறிக்கை

குஜராத்தில் இன்று தேர்தல் நடத்தப்பட்டால் ஆம் ஆத்மி ஆட்சியமைக்கும் என உளவுத் துறை அறிக்கை வந்திருப்பதை அறிந்தேன். அந்த அறிக்கை வெளியனாதில் இருந்து காங்கிரஸ் - பாஜக மறைமுக கூட்டணி அமைத்து ஆம் ஆத்மியை வீழ்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

காங்கிரஸ்-க்கு வாக்களிப்பது வீண்

காங்கிரஸ்-க்கு வாக்களிப்பது வீண்

மாநிலத்தை ஆட்சி செய்யும் பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியை பயன்படுத்துகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குகளை பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. சில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைய முன்வந்தனர். ஆனால் அவர்களை காங்கிரசிலேயே தொடருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெற்றாலும், அதன்பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு மாறிவிடுவார்கள். இதனால் காங்கிரஸ் கட்சி வாக்களிப்பது வீண் வேலை. வாக்குகளை சிதறவிடாமல், மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

English summary
Delhi Chief Minister and party coordinator Arvind Kejriwal has announced that if the Aam Aadmi Party forms the government in Gujarat, Rs. 40 will be given daily for cow maintenance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X