ஆஸி.யில் நடப்பது ஆரம்பம் தான்... நாளை பெங்களூருவைத் தாக்குவோம்: ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்
பெங்களூரு: ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து நாளை பெங்களூருவில் தாக்குதல் நடத்துவோம் என டுவிட்டர் வாயிலாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுமார் 50க்கும் அதிகமான பொதுமக்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஹோட்டலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடி ஏற்றப் பட்டுள்ளது.
ஏற்கனவே 5 பேர் தப்பி வந்து விட்ட சூழலில், தீவிரவாதிகள் வசம் சிக்கியுள்ள மீதமுள்ள பொதுமக்களை மீட்க போலீசார் போராடி வருகின்றனர். பிணைக்கைதிகளில் ஒருவர் இந்தியர் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார்.

இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் எம்.என்.டி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த மேதி என்ற இளைஞரைப் பெங்களூரு போலீசார் கைது செய்தனர். அவர் மீது, ஷமி என்ற பெயரில் டுவிட்டர் வாயிலாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று பெங்களூரு போலீசாருக்கு டுவிட்டர் வாயிலாக மிரட்டல் விடுக்கப் பட்டது. அதில், இதற்குப் பழிக்குப் பழி வாங்குவோம் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், இஸ்லாமிக் ஸ்டேட் மீடியா என்ற ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு டுவிட்டர் பக்கத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளதாகத் தெரிகிறது. அதில், ‘சிட்னி சம்பவம் ஒரு ஆரம்பம் தான். ஷமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெங்களூரு மீது நாளை தாக்குதல் நடத்துவோம். பெங்களூரு பெரும் விளைவை சந்திக்கும்' என மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.
ஆனால், இவ்வாறு மிரட்டல் எதுவும் வரவில்லை என பெங்களூரு போலீசார் மறுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications