பணக்கார ஆதரவு மோடி அரசை வீழ்த்த வேண்டும்.. கர்நாடக பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்
பெலகாவி: மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் (பெல்காம்) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: பண மதிப்பிழப்பு அறிவிப்பு மோடியால் உருவான ஒரு பேரழிவு.

நாட்டில் 1 சதவீதம் பேர்தான் கருப்பு பணம் வைத்துள்ளனர். ஆனால் 99 சதவீதம் மக்கள் ஏழை, எளியவர்கள்தான். இவர்கள்தான் மோடி அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருப்பு பணத்தை ஒழிக்க மோடி முயன்றிருந்தால் காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். ஆனால் கருப்பு பண ஒழிப்பு விஷயத்தில் மோடி ஒரு பொய்யர் என மக்கள் சொல்கிறார்கள்.
விஜய் மல்லையா வாங்கிய கடனை ஏன் தள்ளுபடி செய்தீர்கள் என நான் மோடியை பார்த்து கேட்க விரும்புகிறேன். நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் பெருகியுள்ளது.
மோடி பணக்காரர்களுக்காக அரசு நடத்துகிறார். 50 குடும்பங்களுக்காகவே அவரது அரசு நடவடிக்கைகள் அமைகின்றன. பணக்காரர்களுக்கான இந்த அரசை (சூட் பூட் சர்க்கார்) டெல்லியிலிருந்து அகற்ற வேண்டும். காங்கிரஸ் எப்போதுமே ஏழைகளுக்காக போராடும் கட்சி.
பாஜக தலைவர்கள் பலருக்கும், ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து முன்கூட்டியே தெரியும். மேற்கு வங்க பாஜகவினர், நோட்டு அறிவிப்பு வெளியாகும் முன்பு பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications