சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. கோரிக்கை நிராகரிப்பு

தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்களது சொத்துக்களை விடுவிக்கக்கோரி மனு செய்துள்ள 12 நிறுவனங்களின் மனுக்களை முதலில் விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது ஏற்கனவே விசாரணை முடிக்கப்பட்டு 7ஆம் தேதி (இன்று) தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீது இன்று தீர்ப்பு கூறிய நீதிபதி, ''மற்ற மனுக்களை விசாரிப்பதற்காக, பிரதான வழக்கு விசாரணையை நிறுத்த முடியாது. பிரதான வழக்குடன் மற்ற மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பிரதான வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன்பு அனைத்து மனுக்களும் முடிக்கப்படும்'' எனக் கூறி ஜெயலலிதா மனுவை நிராகரித்தார்.
அன்பழகன் தரப்பு வாதம்
இதனிடையே ஜெயலலிதா சொத்துவிப்பு வழக்கில் பேராசிரியர் க.அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், வாதத்தை 15ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல்செய்யுமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்நீதிபதி மைக்கேல் ஜான் குன்ஷா உத்தரவிட்டார். ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் வாதம் வரும் 19ம் தேதிக்கு தொடங்கவும் என்று உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications