For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'மங்கள்யான்' பற்றி பொதுமக்கள் அறிய புதிய ஃபேஸ்புக் பக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்கிரகம் குறித்த ஆராய அனுப்பி வைக்கப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் பற்றி பொதுமக்கள் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ஃபேஸ்புக் பக்கத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

மங்கள்யான் விண்கலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் இணைந்துள்ளது.

Mangalyan Facebook Page

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், மங்கள்யான் விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ www.facebook.com/pages/ISROs-Mars-Orbiter-Mission/1384015488503058 என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளோம்.

மங்கள்யான் விண்கலம், அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அன்றிலிருந்து 6 மாதங்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்த ஃபேஸ்புக் பக்கம் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். இஸ்ரோவின் அதிகாரப்பூரவ் இணையதளமான www.isro.gov.in மூலமாகவும் மார்ஸ் மிஷன் ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்லலாம் என்றார்.

English summary
As India's space probe got into the Earth's orbit Tuesday for a nine-month long odyssey to Mars, the popular social media site Facebook will keep you posted on its adventurous voyage to the red planet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X