ரயில் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறுக: மே. வங்க சட்டசபையில் தீர்மானம்!
கொல்கத்தா: மத்திய அரசின் ரயில் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் உடனே திருமப் பெற வலியுறுத்தியும் மேற்கு வங்க சட்டசபையில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் கட்டணம் 14.2%; சரக்கு கட்டணம் 6.5% உயர்த்தப்பட்டது. இது நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. இக் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ரயில் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த இத்தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. அனிசூர் ரகுமன், ரயில் கட்டணம் உயர்வு ஜனநாயகமற்றது மற்றும் தகுதியற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ளது என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் ஒரு மனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications