குடியரசு தலைவர் தேர்தல்.. "பீஸ்ட் மோடில்" மம்தா! ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம்
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக 22 மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜுன் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

வேலையைத் தொடங்கிய கட்சிகள்
குடியரசுத் தலைவர் தொடர்பாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகிய இருவரையும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்தா பானர்ஜி கடிதம்
இந்தநிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக 22 மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில், ஒருமித்த கருத்துகள் கொண்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரும் ஜூன் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு கடிதம்?
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மம்தா பானர்ஜி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மூன்றாவது அணியா?
மம்தா பானர்ஜியின் இந்த செயல் தேசிய அளவில் முன்றாவது அணியை உருவாக்கும் திட்டமா என்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த முறையே மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் தலைமையில் அணி சேர மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்
இதனிடையே குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஒருமனதுடன் தேர்வு செய்வதற்கான கூட்டமாக இது இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல் இந்தக் கூட்டத்தின் மூலம் பாஜக தனது குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிக்கும் முன்பே, எதிர்க்கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications