Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், அங்கு எந்த கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் இணைந்து நடத்திய சர்வே வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் திரிணாமுல் வெல்லவே வாய்ப்பு அதிகம் என்றாலும் கூட மம்தா- என்டிஏ இடையே போட்டி மிக கடுமையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன.

West Bengal Elections opinion Poll TMC Leads BJP by 155-170 vs 100-115 Seats says Matrize-IANS

திரிணாமுல் வெல்லும்

மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் தெரிகிறது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் திரிணாமுல் கட்சிக்குச் சற்று முன்னிலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது திரிணாமுல் வெல்ல வாய்ப்பு உள்ளது என்றாலும் கடந்த முறையைப் போலப் பிரம்மாண்ட வெற்றிக்கு எல்லாம் சாத்தியம் இல்லை. போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றும் மிக குறைந்த வாக்குகளே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்பதால் வாக்குப்பதிவு வரையிலும் கூட அங்குப் போட்டிக்குப் பஞ்சமே இருக்காது.

கடும் போட்டி

மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் சர்வேபடி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 155-170 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக கூட்டணி 100-115 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 5-7 இடங்களில் வெற்றி பெறும் என மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் இணைந்து நடத்திய இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிக மிகக் குறைவாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 2% வாக்குகளே யார் ஆட்சியைப் பிடிப்பார் என்பதைத் தீர்மானிப்பதாக உள்ளது. இதில் திரிணாமுல் கட்சி 43-45% வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 41-43% வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 13-15% வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக

இந்த நம்பரை வைத்துப் பார்த்தால் திரிணாமுல் காங்கிரஸுக்கு சாதகமான சூழலே இருப்பது போலத் தெரிகிறது. இருப்பினும், போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என இந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன. பல தொகுதிகளில் பாஜக தனது இருப்பைத் தக்க வைத்துள்ளதால், கடந்த தேர்தல்களை விட இந்த முறை மம்தாவுக்கு சவால் அதிகமாகவே இருக்கும்.

2021 மேற்கு வங்க தேர்தல்

கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 290 தொகுதிகளில் போட்டியிட்டு 215 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 293 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 77 தொகுதிகளில் வென்றது. இது முந்தைய தேர்தலை விட 74 தொகுதிகள் அதிகமாகும். காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இருப்பினும், அந்த கூட்டணியில் ஐஎஸ்எஃப் என்ற கட்சி மட்டுமே ஒரு இடத்தில் வென்றது. மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை இந்த முறை அங்கு ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த முறை அங்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடந்த நிலையில், இந்த மறை 2 கட்டங்களாக மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உடன் மே 4ம் தேதி மேற்கு வங்கத்திற்கும் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+