மனசாட்சியே இல்லையா? புலம் பெயர் தொழிலாளியை நாய் பட்டியில் தங்க வைத்த ஓனர்! மாசம் ரூ 500 வாடகை வேறு!
கொச்சி: கேரள மாநிலம், கொச்சியில் நாய்களை அடைத்து வைக்கும் ஒரு பட்டியில் புலம் பெயர் தொழிலாளரை மாதம் ரூ 500 வாடகையில் அவருடைய உரிமையாளர் தங்க வைத்திருந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர். இவர் கேரள மாநிலம் கொச்சியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் கேரளாவில் 4 ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் கேரளாவில் வீட்டு வாடகை கொடுத்து முன்னேற முடியாது என்பதால் தங்குவதற்கு யோசித்துள்ளார். அப்போது இதுகுறித்து தனது உரிமையாளரிடம் கூறிய போது அவர் தனது வீட்டுக்கு பின்புறம் ஒரு வீடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு தங்குவதற்கு மாத வாடகையாக ரூ 500 கொடுத்தால் போதும் என கூறிய நிலையில் ஷியாம் சுந்தருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. பிறகு அவரும் அந்த வீட்டை போய் பார்த்தார், ஒரு சிறிய அறை இருந்தது. அந்த அறைக்கு சுமார் 3 மாதங்களாக ரூ 500 பணத்தை வாடகையாக ஷியாம் சுந்தர் கொடுத்து வந்துள்ளார்.
அந்த அறை நாய்களை தங்க வைக்கும் பட்டி என கூறப்படுகிறது. அந்த பட்டியில்தான் மாதம் ரூ 500 வாடகைக்கு ஷியாம் தங்கியிருந்தார். மனிதத்தன்மையற்ற இந்த சம்பவம் குறித்து கொச்சி மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஷியாமிடம் கேட்ட போது என்னால் வாடகை கொடுக்க முடியாது என்பதால் தான் இங்கு தங்கிவிட்டதாகவும் அங்கேயே சமைத்து சாப்பிடுவதாகவும் , வேலைக்கு செல்லும் நேரத்தில் அறையை பூட்டி விட்டு செல்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். நாய்கள் தங்கும் பட்டியின் இரும்பு கிரில்லை சுற்றி கார்டுபோர்டுகள் அடிக்கப்பட்டிருந்தன.
அந்த அறையில் செல்போனை சார்ஜ் போடும் வசதி இருக்கிறதாம். இதுகுறித்து வீட்டு உரிமையாளரிடம் கேட்ட போது, அவருக்கு நாய் பட்டியை அடுத்து இருக்கும் வீட்டைத்தான் வாடகைக்கு விடுத்தேன். ஆனால் அவர் அதைவிட்டுவிட்டு நாய் பட்டியில் தங்கியது தனக்கு தெரியவே தெரியாது என்றாராம். அது போன்ற ஒரு இடத்தில் தங்க வைத்து விட்டு அதற்கு மாத வாடகை ரூ 500 பெற்றதையும் அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஷியாமிடம் பிரவோம் மாநகராட்சி அதிகாரிகள் பேசிய போது அவருக்கு அந்த இடத்தை விட்டு வர மனம்வரவில்லை என்றாராம். ஆனால் இதை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர். ஷியாம் அந்த நாய் பட்டியில் தேவையான வசதிகளுடன் இருந்தாலும் அங்கு அவர் தங்குவது மனிதத்தன்மையற்றது. எனவே அவரை முகாமில் அனைத்து வசதிகளுடன் தங்க வைக்க அவரை நாய்பட்டியில் இருந்து இடமாற்றம் செய்ய போலீஸுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications