"டிரைஸை கழட்டு!" டாய்லெட்டில் பள்ளி மாணவிகளை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த சீனியர்ஸ்! பகீர் சம்பவம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மாணவிகள் கொடூரமாக ராகிங் செய்யப்பட்ட மோசமான சம்பவம் அரங்கேறி உள்ளது
பள்ளி அல்லது கல்லூரிகளில் ஜூனியர் மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் அத்துமீறி நடந்து கொள்வது தான் ராகிங். இதனால் மாணவர்கள் மன ரீதியாகக் கூட பாதிக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ராகிங் கொடுமையைத் தடுக்க கடுமையான நடைமுறைகள் முறையாக அமல்படுத்தப்பட்டு உள்ளன.

ராகிங்
இருப்பினும், நாட்டின் பிற மாநிலங்களில் ராகிங் அத்துமீறல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற ராகிங் கொடூரம் கல்லூரிகளில் தான் நடக்கும். ஆனால், மேற்கு வங்கத்தில் பள்ளி ஒன்றில் மாணவிகள் ராகிங் செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. அதுவும் ஆறாம் வகுப்பு மற்றும் 7ஆம் வகுப்பு மாணவிகளை டாய்லெட்டிற்கு அழைத்துச் சென்று சீனியர்கள் ராகிங் செய்து உள்ளனர்.

நிர்வாணமாக்கி வீடியோ
மேற்கு வங்கத்தில் கர்தா பகுதியில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் தான் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இங்கு 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள், ஆறாம் வகுப்பு மற்றும் 7ஆம் வகுப்பு மாணவிகளை டாய்லெட்டிற்கு அழைத்துச் செல்வார்களாம். அங்கு வைத்து அவர்களின் ஆடைகளைக் களையச் சொல்லி ராகிங் செய்வார்கள். பின்னர் அதனை வீடியோ மற்றும் ஃபோட்டோவாகவும் எடுத்து வைத்துக் கொள்வார்களாம்.

போராட்டம்
கொஞ்சக் காலமாகவே இதுபோன்ற ராகிங் கொடூரம் அரங்கேறி வருகிறது. ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர், ஒரு கட்டத்தில் பள்ளிக்குச் செல்ல மறுத்து உள்ளனர். பெற்றோர் பள்ளிக்குச் செல்ல வலியுறுத்தவே அழுது கொண்டே இதைத் தெரிவித்து உள்ளனர். அதன் பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெற்றோர் புகார்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சில காலம் முன்னதாகவே இந்த ராகிங் கொடூரம் நடந்து உள்ளது. அப்போதே பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் இதனைப் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்களாம். இருப்பினும், அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவிகள் மீது ஸ்ட்ரிட் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. வெறுமென எச்சரித்துவிட்டு, மன்னிப்பு கடிதம் மட்டும் வாங்கிக் கொண்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் கொடூரம்
இந்தச் சூழலில் கடந்த வாரம் மீண்டும் சில சீனியர் மாணவிகள் ஜூனியர்களை அதேபோல ஆடைகளைக் களைய வைத்து ராகிங் செய்யத் தொடங்கி உள்ளனர். இதையடுத்தே பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாகவும் விசாரணை செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
-
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications