Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கதேச வீரர்களை எல்லையில் ஓடவிட்ட இந்தியா.. உருட்டு கட்டையுடன் திரண்ட மக்கள்.. ஜெய் ஸ்ரீராம் கோஷம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் எல்லையில் இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அப்போது நம் வீரர்களுக்கு ஆதரவாக எல்லையோர கிராம மக்கள் உருட்டுக்கட்டையுடன் வந்து வங்கதேசத்தை ஓடவிட்ட சம்பவம் நடந்துள்ளதோடு, அதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு நடக்கிறது. இதன் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஷ் உள்ளார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் அவர் நம் நாட்டை தேவையின்றி சீண்டி வருகிறார்.

bangladesh india bsf

அதோடு எல்லையில் வங்கதேசம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. நம் நாடு நினைத்தால் எளிதில் வங்கதேசத்துக்கு பதிலடி கொடுக்க முடியும். ஆனால் நம் நாடு பொறுத்து போகிறது. ஆனாலும் கூட வங்கதேசம் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. எல்லையில் துருக்கி நாட்டு ட்ரோன்களை பறக்கவிட்டு நம் நாட்டை வங்கதேசம் கண்காணித்தது. இதற்கு நம் நாடும் எல்லையில் ட்ரோன்களை பறக்கவிட்டு பதிலடி கொடுத்தது.

ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக இருந்தவரை நம் நாட்டுக்கும், அந்த நாட்டுக்கும் இடையேயான உறவு என்பது யாராலும் அசைக்க முடியாத வகையில் சிறப்பாக இருந்தது. ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தார். வங்கதேசம் என்ற நாடு உருவாக அவரது தந்தை முஜ்பூர் ரஹ்மானுக்கு நம் ராணுவம் உதவியதை மறக்காமல் ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நெருக்கம் காட்டினார். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. இதுவரை இல்லாத வகையில் இந்தியா - வங்கதேச உறவில் விரிசல் விழுந்துள்ளது.

bangladesh india bsf

இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எல்லையில் நம் நாட்டின் படையினருடன், வங்கதேசம் சீண்டிப்பார்த்து மூக்கு உடைப்பட்டு பின்னங்கால் பிடரிபட தெறித்து ஓடியுள்ளது. அதாவது ஷேக் ஹசீனா ராஜினாமாவுக்கு பிறகும் கூட வங்கதேசம் கொதிப்பான நிலையில் உள்ளது. பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கி செல்கிறது. இதனால் வாழ்வாதாரம் தேடி வங்கதேசத்தின் நம் நாட்டுக்குள் நுழைய முயல்கின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் எல்லையில் நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா - வங்கதேசம் இடையே மொத்தம் 4,096 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லைப்பகுதி உள்ள நிலையில் இரவு பகலாக அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் வங்கதேசம் - இந்தியா இடையேயான எல்லை மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள சுக்தேவ்பூர் கிராமத்தின் வழியாக செல்கிறது.

bangladesh india bsf

இங்கு எல்லையை பலப்படுத்தும் வகையில் வேலி அமைக்கும் பணியை எல்லை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். இதற்கு வங்கதேச நாட்டின் பிஜிபி எனும் எல்லை கண்காணிப்பு படையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் எல்லை பகுதியில் இந்தியா வேலி அமைப்பதாக வங்கதேசம் கூறியது. அதனை புறம்தள்ளிய நம் நாட்டு வீரர்கள், இருநாடுகள் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்கள் நாட்டு எல்லையில் தான் வேலி அமைக்கிறோம் என்று பதிலடி கொடுத்தனர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே மோதல் தொடங்கியது.

இந்த வேளையில் மேற்குவங்க எல்லையோர கிராம மக்கள் நம் நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஆதரவாக உருட்டு கட்டையுடன் களமிறங்கினர். இதனை பார்த்த வங்கதேச வீரர்கள் சிதறி ஓடினர். அதன்பிறகு இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான சூழல் வந்தது. தற்போது எல்லையில் நம் நாடு வேலி அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது. இருப்பினும் நம் நாட்டை சீண்டி வரும் வங்கதேசம் இப்போது மோதலை தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது. இதற்கிடையே இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதுதொடர்பான வீடியோவை மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து நம்நாட்டை சேர்ந்த எல்லையோர கிராம இளைஞர்கள் உருட்டுக்கட்டைகளுடன் திரண்டு நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த பதிவில், சுவேந்து அதிகாரி, ‛‛இந்த ஆர்ப்பரிப்பு எப்படி உள்ளது? ‛ஹை' யாக உள்ளது சார்.. மால்டா மாவட்டம் கலியாசக் III பிளாக்கில் பைஸ்நப் நகர் கிராம பஞ்சாயத்தில் சுக்தேவ்பூர் உள்ளது. இங்குள்ள நம் நாட்டு எல்லையில் வேலி அமைக்க சென்ற நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினருக்கு வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வேளையில் நம் நாட்டை சேர்ந்த அந்த பகுதி மக்கள் எல்லை பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து வங்கதேசத்தினரை பயமுறுத்தியதோடு, எங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த இடையூறையும் சகித்து கொள்ளமாட்டோம் என்பதை உணர்த்தி உள்ளனர். இதனால் வங்கதேச எல்லை காவல் படையினர் தப்பித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேற்கு வங்க மாநில மக்களின் நரம்புகளில் தேசிய உணர்வு உள்ளது'' என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+