ரூ.10,00,000 விலை போன கணவனின் கிட்னி.. கள்ளக்காதலன் வீட்டில் மெல்லமா கதவை திறந்து பேசிய மனைவி.. ஓஹோ
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர், யாருமே நினைத்துக்கூட பார்க்காத வகையில் துரோகத்தை செய்துள்ளார்.. மாமனார், மாமியார், கணவர் என எத்தனையோ பேர் அட்வைஸ் தந்தும், யார் பேச்சையும் அந்த பெண் மதிக்கவில்லை.. என்ன நடந்தது?
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பச்சை துரோகம் ஒன்று நடந்துள்ளது.. அங்குள்ள சங்க்ரெய்ல் பகுதியில், தன்னுடைய கணவருடன் வசித்து வருகிறார் அந்த பெண். இந்த தம்பதிக்கு 10 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள்.

இந்த பெண் குழந்தையை காரணம் காட்டியே, வீட்டிலுள்ள நிதிநிலைமையை அடிக்கடி கணவரிடம் சண்டை போடுவாராம் மனைவி.. குழந்தையின் படிப்பு, கல்யாணம், எதிர்காலம், குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்வது என குடும்பத்தின் நிதிசூழலை காரணம் காட்டியதுடன், கணவனை சிறுநீரகத்தை விற்குமாறும் அழுத்தம் தந்து வந்துள்ளார்.
சிறுநீரகம்: மனைவியின் தொல்லை தாங்காமல், தன்னுடைய கிட்னியை விற்கவும் முடிவு செய்தார் கணவர். இதற்காக, கடந்த ஒரு வருடமாக தன்னுடைய சிறுநீரகத்தை வாங்குபவரை தேடிக் கொண்டேயிருந்தார்.. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தன்னுடைய சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்று, அந்த பணத்தை மனைவியிடம் தந்துள்ளார்.. ஆனால், சிறுநீரகத்தை விற்று தந்த கணவரின் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு, கள்ளக்காதலனுடன் ஓடிப்போய்விட்டார் மனைவி.
பாரக்பூரைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவருடன் ஃபேஸ்புக்கில் அறிமுகமாகியிருக்கிறார் மனைவி.. பாரக்பூரில் சுபாஷ் காலனியில் வசித்து வரும் ரவிதாஸ், ஒரு ஓவியர் ஆவார்.. நட்பில் தொடங்கி, இறுதியில் கள்ளக்காதலில் இவர்களது உறவு முடிந்துள்ளது. கணவர் கிட்னி விற்று தந்த 10 லட்சம் ரூபாயுடன், கள்ளக்காதலனிடம் சென்றுவிட்டார் மனைவி.
முகவரி: இதனிடையே, தன்னுடைய மனைவியை காணாமல் பல இடங்களில் கணவர் தேடிக் கொண்டேயிருந்தார்.. ஒருவழியாக பராக்பூரில், கள்ளக்காதலனுடன் மனைவி வசித்துவருவதை கேள்விப்பட்டு, அந்த முகவரியை வாங்கி கொண்டு தன்னுடைய குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அங்கு நேரில் சென்றிருக்கிறார் கணவர்.
அந்த முகவரியிலிருந்த வீட்டுக்கதவை பலமுறை தட்டியும் யாருமே திறக்கவில்லை.. நீண்ட நேரத்துக்கு பிறகு, கதவை லேசாக திறந்த மனைவி, "இங்கே எதுக்காக வந்தீங்க? உடனே கிளம்பி போங்க.. உங்களுக்கு விரைவில் டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்புகிறேன் என்று சொல்லி அங்கிருந்து கணவரை துரத்தியடித்துள்ளார்.. மாமனார், மாமியார், பிள்ளைகள் என பல பேர் கெஞ்சியும், அந்த பெண், வீட்டுக்கதவை திறக்கவுமில்லை, யாரிடமும் பேசவும் இல்லை.
நம்பிக்கை துரோகம்: இதைக்கேட்டு மனம் நொந்துபோன கணவன் என்ன செய்வதென்று தெரியாமல், விழித்து, கடைசியில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.
கிட்னியை விற்றால், குடும்பத்தின் நிதி நிலைமை சீராகும், வறுமையும் ஒழியும், மகளின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்று கணவன் நம்பிக்கொண்டிருந்த நிலையில், இன்று அந்த கணவனின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications