ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு உச்சபட்ச செக்யூரிட்டி.. பாதுகாப்பு பணிகளில் 75,000+ வீரர்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. மேலும், சட்டசபை தேர்தலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி காஷ்மீரில் மொத்தம் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

வரும் செப். 18ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், செப்.25 மற்றும் அக்.1ம் தேதி அடுத்தடுத்த வாக்குப்பதிவு நடக்கிறது. தொடர்ந்து அக். 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையர்: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், "2024 லோக்சபா தேர்தல் உலக அளவில் நடந்த மிகப்பெரிய தேர்தல் செயல்முறையாகும். அது வெற்றிகரமாகவும் அமைதியாகவும் முடிந்தது. இது சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்பதாக இருந்தது. எந்தவொரு வன்முறையும் இல்லாமல் அமைதியான முறையில் இந்த தேர்தல் நடந்து முடிந்தது. முழு நாடும் தேர்தல் திருவிழாவைக் கொண்டாடியது. அதில் நாம் பல சாதனைகளை படைத்தோம். உலகிலேயே அதிகபட்ச வாக்குகள் பதிவாகி இருந்தது.
பாதுகாப்பு நடவடிக்கை: ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இடங்களில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நாங்கள் சமீபத்தில் அந்தந்த மாநிலங்களுக்கு சென்றோம். மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது. அவர்கள் தேர்தல் செயல்முறையில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர். அங்கு கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
மக்களவைத் தேர்தல் சமயத்திலேயே காஷ்மீரில் மக்கள் நீண்ட வரிசையில் இன்று வாக்களித்தார். இது மக்கள் மாற்றத்தை விரும்புவது மட்டுமல்லாமல், அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள் என்பதற்கான சான்றாகவும் இருக்கிறது. காஷ்மீரில் ஜனநாயகம் வலுவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதற்காக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்றார்.
பாதுகாப்பு: காஷ்மீரில் புலம் பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், அங்குத் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்குப் பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும் என்றும் பதற்றமான பகுதிகளில் சிறப்பு பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் மேஜர் மாற்றம்.. தேர்தல் அறிவிப்பு இருக்கட்டும்.. சைலண்டாக வந்த உத்தரவு! எழுந்த விமர்சனம்
விரைவில் வீரர்கள்: மேலும், தேர்தல் காரணமாகக் காஷ்மீரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையில் இருந்து 5000 வீரர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்எப் படையில் இருந்து மட்டும் 2 பட்டாலியன்கள் அதாவது 2000 வீரர்கள் அங்கே செல்ல உள்ளனர். மேலும், அசாம் ரைபிள்ஸில் இருந்து 2 யூனிட் காஷ்மீர் அனுப்பப்பட உள்ளனர்.
துணை ராணுவ படைகள்: காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே ஏற்கனவே 70 பட்டாலியன்கள் (சுமார் 70,000 வீரர்கள்) துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர எல்லைப் பாதுகாப்புப் படையும் அங்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அமர்நாத் யாத்திரைக்காக அங்கேயே 500 கம்பெனி (50,000 பணியாளர்கள்) வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் தேர்தல் பணிக்காக அங்கேயே தொடர்ந்து இருப்பார்கள் எனத் தெரிகிறது.
முன்னதாக கடந்த மாதம் காஷ்மீர் சென்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள், அங்குள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். மேலும், மூத்த போலீஸ் அதிகாரிகள் உடனும் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக அங்கு அரசு அதிகாரிகள், குறிப்பாக போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications