மகாராஷ்டிர முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நேரத்தில் மரணித்த முண்டே!!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக கோபிநாத் முண்டே முன்னிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட மை காய்வதற்குள்ளாகவே அவர் மரணித்துப் போனது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முஸ்தீபுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, தாம் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் வாய்ப்பு கிடைத்தால் முதல்வராவேன் என்றும் பிரகடனம் செய்திருந்தார்.

முதல்வர் பதவி யாருக்கு?
இதைத் தொடர்ந்து பாஜக- சிவசேனா கூட்டணியும் தேர்தல் கோதாவில் குதித்தது. சிவசேனாவோ தங்களுக்கே முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

உத்தவ் தாக்கரே?
சிவசேனா தொண்டர்களோ கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று குரல் உயர்த்தினர்.

கோபிநாத் முண்டே ?
பாரதிய ஜனதா கட்சியினரோ தங்களுக்கே முதல்வர் பதவி தர வேண்டும் என்று கூறிவந்தனர். மேலும் மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே அல்லது பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திரா ஃபட்நாவிஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் பாஜகவின் கூறிவந்தனர். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களையும் முன்வைத்து வந்தது.

ஊடக செய்திகள்
இதைத்தான் நேற்று முதல் ஊடகங்கள் எழுதி வருகின்றன. இன்றைய நாளிதழ்களில் கூட கோபிநாத் முண்டேவை முதல்வர் வேட்பாளராக்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.

திடீர் மரணம்
ஆனால் இந்த செய்திகள் எழுதப்பட்ட மை காய்ந்து போவதற்குள் டெல்லி சாலை விபத்தில் சிக்கி அகால மரணமடைந்துவிட்டார் கோபிநாத் முண்டே. இது பாஜகவினரை மீள முடியாத அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications