"அந்தரங்க உறுப்பில்.. கட்டைகளை".. துடிதுடித்த 11 வயது பிஞ்சு.. காதலனை ஏவி சீரழித்த பெண்.. கொடுமை
22 வயது நபர், 11 வயது பெண்ணை சீரழித்து கொடுமைப்படுத்தி உள்ளார்
கொல்கத்தா: 11 வயது பெண்ணை, அவரது உறவுப்பெண்ணே தன் காதலனை விட்டு பலாத்காரம் செய்ய வைத்த கொடுமையும், அராஜகமும் நடந்துள்ளது.
அளவுக்கு அதிகமான மூடநம்பிக்கைகள் சிதறி கிடப்பதாலும், பெரும்பாலான கிராம மக்களுக்கு படிப்பறிவு குறைவு என்பதாலும், இத்தகைய குற்றங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது.
வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.. வயது வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தல்கள் சர்வ சாதாரணமாகிவிட்டது.

தண்டனைகள்
இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருப்பதில்லை.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வரும் நிலையில், இதை எதிர்க்கட்சிகள் விடாமல் விமர்சித்து வருகின்றன.. ஆனாலும், ஆளும் கட்சிகளால் இத்தகைய குற்றங்களுக்கு கடிவாளம் போடமுடியவில்லை. பெண்கள் மீதான பலாத்காரங்கள் இவ்வளவு அதிகரித்த போதிலும் பல்வேறு மாநிலங்களில் உபி போன்ற மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது வியப்பையே தந்து வருகிறது.

உறவுக்கார பெண்
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு கொடூரம் நடந்துள்ளது.. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அந்த 11 வயது பெண், தன்னுடைய உறவு பெண்ணுடன் வசித்து வந்தார்... அந்த உறவுக்கார பெண் 22 வயது நபர் ஒருவரை காதலித்து வந்தார்.. இதனால் அடிக்கடி காதலி வீட்டுக்கு வந்து போயுள்ளார்.. அப்போதுதான் 11 வயது பெண்ணை காதலியின் வீட்டில் பார்த்துவிட்டு, சபலப்பட்டுள்ளார்.. ஒருகட்டத்தில் அந்த பெண்ணை அடைய வேண்டும் என்ற வெறியும் இளைஞருக்கு வந்தது..

செல்போன்
இதற்கு காதலி ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதற்காக, காதலிக்கு ஒரு புதிய செல்போன் வாங்கி தந்தார்.. அத்துடன் கொஞ்சம் பணமும் தந்தார்.. இப்போது, 11 வயது பெண்ணை அடைய வேண்டும் என்று காதலியிடம் சொன்னார் அந்த இளைஞர்.. அதற்கு காதலியும் ஓகே சொல்லி உள்ளார்.. சிறுமியை இளைஞருடன் தங்க வைக்க ஏற்பாடும் செய்தார்.. கடந்த ஞாயிறு, அதே வீட்டிலேயே 11 வயது பெண்ணை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் சிறுமியை தாக்கி, அவரது அந்தரங்க பகுதிகளில் கட்டைகளை சொருகியும் உள்ளார்..

அதிர்ச்சி
சிறுமி ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடக்க, அவளை எடுத்து கொண்டுபோய் யாருமில்லாத பகுதியில் வீசிவிட்டு சென்றார் இளைஞர். மறுநாள் காலை, பாசிர்ஹாட் சப்-டிவிஷனில் உள்ள ஒரு மீன்வளத்திற்கு அருகில் சிறுமி உயிருக்கு போராடி கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ந்தனர்.. உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. ஆனால் சிறுமி ஆபத்தான நிலைமையில் உள்ளதால், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்..

சீரியஸ்
இப்போது உயிருக்கு போராடி கொண்டிருக்கிறாள் சிறுமி.. தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்ததுடன், ஹவுராவின் டோம்ஜூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த அந்த காதலனை கைது செய்துள்ளனர்.. ஆனால், இதற்கெல்லாம் முக்கிய காரணமான அந்த உறவுக்கார பெண் குறித்து எந்த தகவலும் இல்லை.... இந்த தகவலால் மேற்கு வங்க மாநிலமே அதிர்ந்துபோயுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications