சத்தீஸ்கர் காங்கிரஸில் உள்கட்சி பூசல்.. என்ன முடிவு எடுப்பார் ராகுல் காந்தி?.. தொடரும் சிக்கல்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கான முதல்வரை நியமிக்கும் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எந்த முடிவை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போல் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஏதாவது ஒரு சிக்கல் வந்தவண்ணம் உள்ளது.
கடந்த 2018- ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றது. ஆனால் அக்கட்சிக்குள் கோஷ்டி பூசல் நிலவியதால் முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் ஆலோசனையின் பேரில் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு பூபேஷ் பாகலும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.எஸ். சிங் தியோவும் ஆட்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
அந்த வகையில் பாகல் முதல்வராகவும் டி.எஸ்.சிங் தியோ சுகாதாரத் துறை அமைச்சராகவும் உள்ளனர். ஆனால் பாகலின் பதவிக்காலம் அதாவது இரண்டரை ஆண்டுகளுக்கான பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து தியோவுக்கு அவர் வழிவிடுவார் என எதிர்பார்த்து எதிர்பார்த்து நேரடியாக எதிர்க்கும் முடிவை தியோ எடுத்துவிட்டார்.

டெல்லி
இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாகலும் தியோவும் டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தனர். அப்போது கடந்த ஆண்டு மார்ச் மாதம் சத்தீஸ்கர் முதல்வர் பாகல் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தினார், அதற்கு சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள டிஎஸ் சிங்கை அழைக்கவில்லை என சிங் தியோ குற்றம்சாட்டியிருந்தார்.

ஆலோசனைக் கூட்டம்
அது போல் எந்த விதமான சுகாதாரத் துறை ஆலோசனைக் கூட்டங்களுக்கும் அழைத்தாலும் தியோ வருவதில்லை என்று பாகலும் குற்றம்சாட்டினார். மேலும் கடந்த ஜூன் மாதம் ஊரக பகுதிகளில் மருத்துவமனைகளை ஏற்படுத்துவது குறித்து பாகல் அறிவித்த முடிவை தியோ எதிர்த்தார். தன்னை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுத்ததாகவும் தியோ குற்றம்சாட்டியிருந்தார்.

ஸ்திரமற்ற நிலை
தேர்தலின் போதே முடிவு செய்யப்பட்ட இந்த அதிகார பகிர்வை தற்போது எதிர்ப்பது ஏன் என பாகலிடம் கேட்ட போது அவர் கூறுகையில் தற்போதைய சூழலில் அதிகாரத்தை மாற்றினால் ஸ்திரமற்ற நிலை மாநிலத்தில் ஏற்பட்டுவிடும் என்கிறார்.

சாதாரண விவசாய குடும்பம்
தற்போது முதல்வராக உள்ள பூபேஷ் பாகல் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். ஓபிசி பட்டியலை சேர்ந்த ஒரு விவசாயி. சாலையில் இறங்கி போராடக் கூடியவர். கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் அஜித் ஜோகி மற்றும் பாஜகவின் ராமன் சிங் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி கண்டவர்.

ராஜ வம்சத்தை சேர்ந்தவர்
அதேவேளையில் தியோ ராஜ வம்சத்தை சேர்ந்தவர். நன்கு ஆங்கிலம் பேசுபவர். பாகலை பாராட்டியதற்காக தனது வாகனத்தை தாக்குதல் நடத்தி தன்னை கொலை செய்ய வந்ததாகவும் அதன் பின்புலத்தில் தியோ இருந்ததாகவும் வட சத்தீஸ்கர் பகுதியின் ஆதிவாசி எம்எல்ஏ பிரஹஸ்பதி சிங் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் என்ன செய்வார்?
தற்போது ராகுல் காந்தி என்ன முடிவு எடுப்பார் என தெரியவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கொண்ட வாக்குறுதியை நிறைவேற்ற உடனடியாக தியோவை முதல்வராக்குவாரா இல்லை மாநிலத்தில் வலிமையான தலைவராக உள்ள பாகலை நீக்க வேண்டாம் என கருதி, பாகலின் வழியை பின்பற்றுமாறு தியோவுக்கு உத்தரவிடுவாரா என தெரியவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும், இந்த உள்கட்சி பகை என்பது காங்கிரஸை வலுவிழக்க வைத்துவிட்டு பாஜகவை வலுவாக்கும்.
-
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications