தங்கச்சின்னு கூட நினைக்கல.. ஆபாச படமும், வக்கிர அண்ணனும்.. இந்த கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா
போபால்: மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
மத்திய பிரதேசம், ரேவா மாவட்டத்தில், கடந்த ஜூலை 24ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.. இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு வீட்டில், 9 வயது சிறுமி திடீரென இறந்துவிட்டாள்.. இதுகுறித்து போலீசார் விரைந்து சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணையையும் ஆரம்பித்தனர்.

விசாரணை: எனினும், சிறுமியை கொன்றது யார் என்று உடனே தெரியாததால், கிட்டத்தட்ட 50 பேரிடம் விசாரணையில் ஈடுபட்டனர் போலீஸார்.. அப்போதுதான், சிறுமியின் குடும்பத்தினர் மீதே சந்தேகம் வந்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடந்துள்ளது. அப்போதுதான்., சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.. சிறுமியின் சகோதரனே இந்த கொடுமையை செய்திருக்கிறான்.. அந்த சகோதரனுக்கு வயது வெறும் 13.
9 வயது தங்கையை, 13 வயது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்ததும், இந்த குற்றங்களையெல்லாம் வெளியில் தெரியாமல், அவரின் அம்மா மறைத்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அண்ணன்: அதாவது, சம்பவத்தன்று சிறுமி தூங்கி கொண்டிருந்தாளாம்.. அப்போது தங்கைக்கு பக்கத்திலேயே அண்ணனும் படுத்துக்கொண்டு, செல்போனில் ஆபாச படம் பார்த்திருக்கிறான்.. அப்போதுதான் திடீரென சகோதரன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.. இதனால் அந்த சிறுமி, "அப்பாவிடம் இதை பற்றி சொல்லப்போவதாக" அழுதுகொண்டே சொன்னாளாம்.. அப்போதுதான் பயந்துபோன அண்ணன், தங்கையின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளான்.
தங்கை கண்ணெதிரே இறந்துவிடவும், இதைப்பார்த்து கதிகலங்கி போன அண்ணன், உடனே தன்னுடைய அம்மாவிடம் இதை பற்றி சொல்லியிருக்கிறான். அப்போதுதான், அம்மாவும், மற்ற 2 சகோதரிகளும் சேர்ந்து இந்த விஷயத்தை மூடி மறைத்திருக்கிறார்கள். இறுதியில் போலீசாரிடம் சிறுமியின் 17 வயது சகோதரன், 17 மற்றும் 18 வயது 2 சகோதரிகள், அம்மா ஆகியோர் நடந்த சம்பவத்தையெல்லாம் வாக்குமூலத்தில் கூறி ஒப்புக்கொண்டனர்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி விவேக் சிங் சொல்லும்போது, "ஏப்ரல் 24 தேதி, ஜாவா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஒரு வீட்டின் ஹாலில், 9 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். குடும்ப உறுப்பினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சிறுமி: அப்போதுதான், சிறுமியின் 13 வயது சகோதரர், சிறுமியின் அருகில் தூங்கியது தெரியவந்தது. அதோடு, அவர் செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துவிட்டு, தங்கையை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமி இதை பற்றி அப்பாவிடம் சொல்லப்போவதாக கூறியிருக்கிறாள். இதைக்கேட்டு பயந்த சிறுவன், அந்த சிறுமி சுயநினைவை இழக்கும் வரை கழுத்தை நெரித்துவிட்டு, அதற்கு பிறகே தூங்கி கொண்டிருந்த அம்மாவை எழுப்பியிருக்கிறார்.. ஆனால் சிறுமி உயிரோடிருப்பதை பார்த்த சிறுவன், மறுபடியும் கழுத்தை நெரித்துள்ளார்.. அப்போதுதான் சிறுமி உயிர் பிரிந்துள்ளது.
சகோதரிகள்: இவ்வளவு நடந்து முடிந்தபிறகுதான் தூங்கி கொண்டிருந்த மற்ற சகோதரிகள் கண் விழித்துள்ளார்கள்.. இதனை மூடி மறைப்பதற்காகவும், போலீஸுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், வழக்கமான இடத்தை விட்டு வேறு இடத்தில் போய் படுத்து கொண்டார்கள். .
மறுநாள் காலையில், விஷப்பூச்சி கடித்து, என் மகள் இறந்துவிட்டாள் என்று அம்மா கதறி அழுது நாடகம் போட்டிருக்கிறார்.. போலீசுக்கு தகவல் கிடைத்து சடலத்தை மீட்க சென்றபோதும், இதே காரணத்தை தான், போலீசாரிடம் அம்மா சொல்லியிருக்கிறார்.. ஆனாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது, கழுத்து எலும்புகள் உடைந்தது என எல்லாமே வெட்டவெளிச்சமாகிவிட்டது.
வெட்ட வெளிச்சம்: அதற்கு பிறகே, சிறப்பு விசாரணைக்குழுவை இதில் இறக்கினோம்.. மொத்தமாக 50 பேரிடம் விசாரணை நடத்தியதில், குடும்பத்தினர் வாக்குமூலம் மட்டும் வித்தியாசமாக இருந்தது.. சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்" என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications