காதை பிளக்கும் சத்தம்.. நொடிகளில் கிளம்பிய புகை.. நேபாள விமான விபத்தில் என்ன நடந்தது? கிராமவாசி பரபர
காத்மண்டு: நேபாளத்தில் கொடூரமான விமான விபத்து அரங்கேறியுள்ள நிலையில், விபத்து நடந்த போது என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை அருகே இருக்கும் கிராம வாசிகள் சிலர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நேபாளத்தில் இன்று நடந்த மிக விமான விபத்து மிக மோசமான ஒன்றாக மாறிவிட்டது. ஏடிஆர்- 72 பயணிகள் விமானம் நேபாளத்தின் பொகாராவில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மொத்தம் 72 பேர் பயணித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடந்த மிக மோசமான விபத்தாக இது உள்ளது. இதுவரை இந்த விபத்தில் 68 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விபத்து
விமானம் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் அங்குள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த உடனேயே அங்கு மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுக்க கருப்பு புகை எழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர். இதனிடையே விபத்து நடந்த போது அங்கு என்ன நடந்து என்பது குறித்த தகவல்களை அந்த கிராம மக்கள் பகிர்ந்துள்ளனர்.

ஆற்றின் கரை
விமான விபத்து நடந்த உடன் அங்கிருந்த மக்களைக் காப்பாற்ற அருகே உள்ள கிராம மக்கள் அங்கு விரைந்தனர். விமானம் அங்கே உள்ள சேதி ஆற்றின் கரையில் விழுந்துள்ளது. இங்கு ஆற்றின் கரையில் நிலப்பரப்பு சேறும் சகதியுமாக இருந்ததாகவும் இது மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளத் தடையாக இருந்தது என்று விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 72 பேர் பயணித்துள்ளனர். இதில் 68 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

கிராமவாசி
மத்திய நேபாளத்தின் பொக்காராவில் புதிதாகத் திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இந்த விமானம் ஆற்றின் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் அருண் தாமு இது குறித்துக் கூறுகையில், "நாங்கள் வழக்கம் போல எங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.. அப்போது எங்கிருந்தோ திடீரென ஒரு பலத்த சத்தம் கேட்டது. இதையடுத்து சத்தம் கேட்ட இடத்தை நோக்கி நாங்கள் சென்றோம். கிராமத்தில் மக்கள் தொகை குறைவு நாங்கள் அனைவருமே அங்குச் சென்றோம்.

12 பேரை மீட்டோம்
நாங்கள் அங்குச் சென்றவுடன் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். இருப்பினும், சம்பவ இடத்திற்கு போலீசார் வரக் கொஞ்ச நேரம் பிடித்தது. நாங்கள் தண்ணீர் வாளிகளைக் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றோம். விமான இடிபாடுகளில் இருந்து நாங்கள் 10-12 பேரைக் காப்பாற்றினோம்.. அவர்களில் இருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. விமானம் சேதி ஆற்றின் கரையில் விழுந்தது. துரதிர்ஷ்டவசமாக அது சேறும் சகதியும் நிரம்பிய ஒரு நிலப்பரப்பு.. இதனால் அங்கு மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன..

என்ன சிக்கல்
விபத்து நடந்த இடத்திற்கு அருகில் செல்வதிலேயே கிராமவாசிகளுக்குச் சிரமமாக இருந்தது. நெருப்பு அதிகமாக இருந்ததால் எங்களால் அருகே செல்ல முடியவில்லை. மற்றொரு பக்கம் சேதி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் அபாயமும் இருந்தது. விமானத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கச் செல்லும்போது, நாங்கள் பள்ளத்தாக்கில் விழுந்துவிடுவோம் என்ற அச்சமும் இருந்தது. போலீசார் வந்த பிறகு தான் மீட்புப் பணிகள் வேகமெடுத்தது" என்று அவர் தெரிவித்தார்.

விமான விபத்து
எட்டி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான இந்த ATR-72 விமானம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. அது பழைய விமான நிலையத்திற்கும் புதிய விமான நிலையத்திற்கும் நடுவே உள்ள சேதி ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. இதுவரை 68 பேரின உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.
-
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications