எழுச்சி ஊசி, 'செக்ஸ் புத்தகம்'.. நித்தியானந்தாவிடம் நடத்தப்பட்ட ஆண்மை சோதனையில் நடந்தது என்ன?
பெங்களூர்: நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையின்போது என்னவெல்லாம் செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் வழக்கு ஒன்றில், சாமியார் நித்தியானந்தா தனது உடல் குழந்தைவாகுவுடன் இருப்பதாக கோர்ட்டில் கூறினார். இதைதொடர்ந்து அவருக்கு ஆண்மை சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆண்மை சோதனை மூன்று வகையாக நடத்தப்படுவது வழக்கம். முதலாவதாக, உடலில் ஆண் குறி உள்ளதா என்பதை கண்ணால் பார்த்து உறுதி செய்வது, 2வது ஊசி மூலமாக ஆண்மை சோதனை, மூன்றாவது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது. இதை தவிர நான்காவதாக விந்தணுவை சோதித்து பார்ப்பதும் ஒரு சோதனை முறையாகும். ஆனால் விந்தணு சோதனைக்கு கோர்ட் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆண் உறுப்பு உள்ளது
நித்தியானந்தாவிற்கு ஆண் உறுப்பு இருப்பது டாக்டர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு ஆண் உறுப்பில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஊசி போடப்பட்டது. அப்படி ஊசிபோட்டதும் ரத்த நரம்புகளில் ரத்தம் பீறிட்டுச் செல்லும். இதனால் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மைக்கு மாறும்.

ஆண்மையில்லாவிட்டால்..
ஆண் உறுப்புக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், ஊசி போட்டாலும் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மை அடையாது. அப்படி விறைப்புத் தன்மை அடையவில்லை என்றால், அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.

எழுச்சி இருந்ததா?
இதன்படி நித்தியானந்தாவுக்கு ஊசி போட்டு பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு எழுச்சி இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஆண்மை சோதனைக்கு ரூ.10 ஆயிரம் செலவு
நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனைக்கு ரூ.10 ஆயிரம் செலவாகியுள்ளதாக சிஐடி போலீசார் தெரிவித்தனர். மேலும், ஆண்மை ஊசி ஒன்றுக்கு மட்டுமே இதில் ரூ.5 ஆயிரம் செலவிடப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சுய இன்பம் செய்ய கோரிக்கை
விந்தணு சாம்பிளை எடுப்பதற்காக நித்தியானந்தாவை சுய இன்பம் அனுபவிக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதற்காக தனியார் ஒரு ரூம் ஏற்பாடு செய்து, காம உணர்ச்சியை தூண்டும் வகையில் பெண்களின் நிர்வாண படங்களுடன் கூடிய செக்ஸ் கதை புத்தகத்தை நித்தியானந்தாவிடம் அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.

நித்தியானந்தா மறுப்பு?
ஆனால் தன்னால் சுய இன்பம் அனுபவிக்க முடியாது என்று நித்தியானந்தா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரை கட்டாயப்படுத்தி விந்தணுவை அளிக்க டாக்டர்களால் வற்புறுத்த முடியவில்லை. இதற்கு தனியாக கோர்ட் அனுமதி தேவை என்று வழக்கை விசாரிக்கும் சிஐடி போலீசாரிடம் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

'அந்த' இடத்தில் முடி கட்
இதனிடையே நித்தியானந்தாவிடம்தான் ஆண்மை சோதனை நடத்தப்பட்டது என்பதற்கு ஆதாரமாக, அவரது ஆண் உறுப்பை சுற்றியுள்ள முடியை 'கட்' செய்து டாக்டர்கள் சேகரித்து வைத்துள்ளனர். கோர்ட்டில் வழக்கு நடைபெறும்போது இதுவும் ஒரு ஆதாரமாக தேவைப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

சுகர், பி.பி
ஆண்மை சோதனை நடத்துவதற்கு முன்பாக நித்தியானந்தாவின் உடல் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து பொது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த மாதிரியில் நித்தியானந்தாவுக்கு நீரிழிவு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக டாக்டர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

குரல் சோதனை
பெங்களூர் சாம்ராஜ்பேட்டையிலுள்ள, விக்டோரியா மருத்துவமனை சோதனையை தொடர்ந்து, அங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மடிவாளாவிலுள்ள தடயவியல் ஆய்வு மையத்துக்கு நித்யானந்தா அழைத்து செல்லப்பட்டு குரல் சோதனை நடத்தப்பட உள்ளது. ஆண் அல்லது பெண் குரலா, வயதுக்கேற்ற குரல் உள்ளதா என்பதை இந்த சோதனை மூலம் உறுதி செய்ய முடியும்.

டாக்டர்களுக்கு ஒத்துழைக்க மறுப்பு
இதனிடையே ஆண்மை சோதனை நடத்தப்பட்டபோது, டாக்டர்களுக்கு நித்தியானந்தா சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது சிஷ்யரான டாக்டர் ஒருவரையும் நித்தியானந்தா மருத்துவமனைக்கு உடன் அழைத்து வந்திருந்தார். டாக்டர்கள் நித்தியானந்தாவுக்கு எந்த ஒரு சோதனையை செய்ய முற்படும்போதும், இந்த சோதனை எதற்காக?, இந்த ஊசி எதற்காக? என்பது போன்ற கேள்விகளை கேட்டு டாக்டர்களை டென்ஷன் செய்து வந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications