ஒரு மணி நேரத்துக்குள் 10 செமீ மழை.. மேகவெடிப்பு என்பது என்ன? உத்தரகாண்ட் பேரிடருக்கு காரணம் இதுதான்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பு ஏற்பட்டது. நிலச்சரிவும் உருவானது. பாறை, மண்ணை அடித்து கொண்டு வந்த காட்டாற்று வெள்ளத்தில் தராலி எனும் கிராமம் மற்றும் ஹர்சிலில் உள்ள ராணுவ முகாம் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 10 ராணுவ வீரர்கள் வரை மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் மேகவெடிப்பு என்பது என்ன? உத்தரகாண்ட்டில் இன்று நிகழ்ந்த இயற்கை பேரிடரின் பின்னணி பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. தற்போது அங்கு கனமழை கொட்டி வருகிறது. உத்தரகாசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. இன்று மதியம் சுமார் 1.45 மணியளவில் தாரலி கிராமத்தில் கனமழை பெய்தது. திடீர் மேகவெடிப்பால் குறைந்த நேரத்தில் அதிக மழை கொட்டியது.

அதேபோல் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் மண், பாறைகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டன. தாரலி கிராமத்தில் உள்ள வீடு, கடைகள் மீது பாறை, மண்ணை அடித்து வந்த வெள்ளம் அதிவேகமாக மோதியது. இதில் பல வீடுகள், கடைகள் அடித்து செல்லப்பட்டன. 4 பேர் பலியான நிலையில் 50க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர்.
அதேபோல் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஹர்சில் என்ற இடத்தில் நம் நாட்டின் ராணுவ முகாம் உள்ளது. மேகவெடிப்பால் கொட்டிய திடீர் மழை மற்றும் நிலச்சரிவால் பாறை, மண்ணை அடித்து கொண்டு வந்த வெள்ளம் ராணுவ முகாமில் பாய்ந்தது. 8 முதல் 10 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர். பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை மீட்கும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு எங்கு ஏற்பட்டது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக மேகவெடிப்பு என்பது சில நிமிடங்களில் அதிகப்படியான மழை பெய்வதை குறிக்கும். மேகவெடிப்பு என்பது மலை மற்றும் குன்று பகுதிகளில் அடிக்கடி நிகழும். குறிப்பாக இமயமலை பகுதியில் இது அடிக்கடி நடக்கும். சூடான மற்றும் ஈரப்பதமான காற்று மலைகளுக்கு இடையே மேலே செல்லும். இதனை ஓரோகிராஃபிக் லிப்டிங் என்பார்கள்.
இந்த காற்று உயரே செல்லும்போது குளிர்ந்து மேகங்களை உருவாக்கும். வளிமண்டலம் ஈரப்பதத்தை தக்க முடியாத அளவுக்கு செல்லும்போது குறைந்த நேரத்தில் அதிகப்படியான மழை பெய்யும். உதாரணமாக 20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஒரு மணிநேரத்துக்குள்ளேயே 10 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை கொட்டுவதை தான் மேகவெடிப்பு என்று சொல்வார்கள்.
இதுபோன்ற ஒரு மேகவெடிப்பு தான் இன்று உத்தரகாண்ட்டில் நடந்துள்ளது. கேர் கங்கா ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தான் இந்த மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கனமழை வெளுத்து வாங்கிய நியைில் கங்கை ஆற்றில் நீர் அதிகளவு பெருக்கெடுத்து ஓடியது. தாரலி பகுதியில் உள்ள ஆற்றிலும் மழை வெள்ளம் அதிகரித்தது. அதிகப்படியான வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மண், கல் உள்ளிட்டவை மலையில் இருந்து அடித்து வரப்பட்டது. இந்த வெள்ளம் தாரலி கிராமத்தை தாக்கியதாக அங்கிருந்த மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications