‛30 ஆண்டுக்கு முன்பே கூறிவிட்டேன்’.. அயோத்தி ராமர் கோவில் பற்றி ஒரே வார்த்தையில் கமல்ஹாசன் பதில்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இன்று முதல் மக்கள் தரிசனத்துக்காக கோவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் ராமர் கோவில் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்றம் கடந்த 2019ல் அயோத்தி ராமர் கோவில் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சனைக்குரிய 2.7 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 2020ல் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இதையடுத்து பணிகள் தொடங்கின. மொத்தம் 5 மண்டபங்களுடன் 3 அடுக்குகளாக ரூ.1800 கோடி செலவில் பணிகள் தொடங்கியது. 4 ஆண்டுகளாக நடந்து வந்த பணியால் கோவிலில் முதல் தளம் முழுமையாக பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.900 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில் கடந்த 18 ம் தேதி 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை கோவில் கருவறையில் நிறுவப்பட்டது.நேற்று இந்த சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிரதமர் மோடி செய்தார். குழந்தை பருவ ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. சிரித்த முகத்துடன் தெய்வீகமாக பார்வையில் ராமர் அருள் பாலிக்கிறார். இப்படியாக நேற்றைய தினம் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.
நேற்று கும்பாபிஷேகம் முடிந்தாலும் கூட பொதுமக்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். இந்நிலையில் தான் பொதுமக்களின் தரிசனத்துக்காக இன்று அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து அயோத்தியில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் தான் ராமர் கோவில் திறப்பு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார். அதாவது ராமர் கோவில் திறப்பு விழா குறித்து நேற்று அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், ‛‛நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி பேசிவிட்னே். அதே கருத்து தான். இப்போதும் அதில் மாற்றம் இல்லை'' என்றார்.
அதாவது கமல்ஹாசன் நடித்த ஹேராம் திரைப்படத்தில் ‛‛ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் ரூட்டு ஒன்னு தான் கேட்டு ஒன்னு தான் ஸ்நேகிதா'' என்ற பாடம் வரும். அதாவது மதவேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் அதன் அர்த்தமாகும். அதனை தான் கமல்ஹாசன் இப்படி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications